இந்தியாவை வீழ்த்துவது உச்சக்கட்ட சவால்: ஷேன் வாட்சன்

0
179

‘‘இந்திய அணியை வீழ்த்துவதற்கு எங்களது மிகச்சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்த வேண்டும் என்பதை அறிவோம். இந்தியா திறமை மிகுந்த, நம்ப முடியாத ஒரு அணி. குறிப்பாக இந்திய மண்ணில் அவர்களை சாய்ப்பது என்பது கடினமான காரியம்.

அந்த பரபரப்பான ஆட்டத்தில் வங்காளதேச அணி இந்தியாவை வீழ்த்தியிருந்தால் எங்களுக்கு நன்றாக இருந்திருக்கும். அதன் பிறகு இந்தியாவுக்கு எதிரான இந்த ஆட்டத்தை எதிர்கொள்வதில் இந்த அளவுக்கு நாங்கள் கவலைப்பட வேண்டியது இருந்திருக்காது. எந்த வடிவிலான கிரிக்கெட்டிலும் இந்திய அணியை அதன் சொந்த மண்ணில் எதிர்த்து ஆடுவது உச்சக்கட்ட சவாலாகும்.

இந்தியாவை அதன் இடத்திலேயே வீழ்த்தினால் அது வியப்புக்குரிய சாதனையாக இருக்கும். தனிப்பட்ட முறையில் பார்த்தால், இது எனது கடைசி சர்வதேச போட்டியாகவும் இருக்கலாம்’’

LEAVE A REPLY