போராடி தோற்றது இலங்கை; இங்கிலாந்து அரையிருதிக்குள்

0
221

டி20 உலகக்கிண்ணத் தொடர் இந்தியாவில் நடைபெற்று வருகிறது.

இதன் சூப்பர் 10 போட்டியின் குருப் 1ல் இங்கிலாந்து இலங்கை அணிகள் இன்று டெல்லி பெரோஷ் கோட்லா மைதானத்தில் மோதின.

நாணயசுழற்சியில் வெற்றி பெற்ற இலங்கை அணி களத்தடுப்பை தெரிவு செய்ததையடுத்து இங்கிலாந்து அணி முதலில் துடுப்பெடுத்தாடி 20 ஓவர் முடிவில் 4 விக்கெட் இழப்புக்கு 171 ஓட்டங்கள் குவித்தது.

ஜேசன் ராய் 42 ஓட்டங்களும், ஜோ ரூட் 25 ஓட்டங்களும், இயன் மார்கன் 22 ஓட்டங்களும் எடுத்தனர். ஆட்டமிழக்காமல் ஜோஸ் பட்டர் அரைசதம் கடந்து 66 ஓட்டங்கள் எடுத்தார்.

ICC World Twenty20 India 2016:  England v Sri Lankaஇதனையடுத்து 172 ஓட்டங்களுடன் களமிறங்கிய இலங்கை அணி ஆரம்பம் முதலே தடுமாறியது. முதல் 4 வீரர்கள் ஒற்றை இலக்க ஓட்டங்களில் ஆட்டமிழக்க அடுத்து களமிறங்கிய ஏஞ்சலா மேத்யூஸ் ஆட்டமிழக்காமல் அரைசதம் கடந்து 73 ஓட்டங்கள் குவித்தார். மற்றபடி அதிகபட்சமாக சமரா கபுகேதரா 30 ஓட்டங்களும், திஸ்ஸர பெரேரா 20 ஓட்டங்களும், தசூன் சனாகா 15 ஓட்டங்களும் எடுத்தனர்.

20 ஓவர் முடிவில் 8 விக்கெட் இழப்பிற்கு 161 ஓட்டங்கள் மட்டுமே எடுத்து 10 ஓட்டங்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது.

கிறிஸ் ஜோர்டன் 4 விக்கெட்டும், டேவிட் வில்லி 2 விக்கெட்டும், பிளங்கட் 1 விக்கெட்டும் வீழ்த்தினர்.

ஆட்டநாயகனாக இங்கிலாந்தின் ஜோஸ் பட்லர் தெரிவானார். இந்த வெற்றியின் மூலம் இங்கிலாந்து அணி அரையிறுதிக்குள் நுழைந்தது.

Sri Lanka's Angelo Mathews walks from the field after they lost to England by 10 runs in their ICC World Twenty20 2016 cricket match at the Feroz Shah Kotla cricket stadium in New Delhi, India, Saturday, March 26, 2016. (AP Photo /Tsering Topgyal)

LEAVE A REPLY