வங்காளதேசத்தை 75 ரன் வித்தியாசத்தில் வீழ்த்தியது நியூசிலாந்து

0
145

டி20 உலகக் கிண்ண கிரிக்கெட் தொடரில் இன்று கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் நடைபெற்ற ஆட்டத்தில் நியூசிலாந்து, வங்காளதேச அணிகள் விளையாடின. டாஸ் வென்று முதலில் ஆடிய நியூசிலாந்து அணியின் துவக்க வீரர் நிகோல்ஸ் 7 ரன்களில் ஆட்டமிழந்தாலும், மற்றொரு துவக்க வீரரான கேப்டன் வில்லியம்சன் பொறுப்புடன் ஆடி 42 ரன்கள் சேர்த்தார்.

முன்றோ 35 ரன்களும், டெய்லர் 28 ரன்களும் எடுத்து ஆட்டமிழந்தனர். மற்ற வீரர்கள் சொற்ப ரன்களில் ஆட்டமிழக்க, நியூசிலாந்து அணி 20 ஓவர் முடிவில் 8 விக்கெட் இழப்பிற்கு 145 ரன்கள் சேர்த்தது. வங்காளதேசம் தரப்பில் முஸ்தாபிஜுர் ரஹ்மான் 5 விக்கெட்டுகள் வீழ்த்தினார்.

இதையடுத்து 146 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் வங்காளதேச அணி களமிறங்கி விளையாடியது. ஆடுகளம் பந்துவீச்சுக்கு சாதகமாக இருந்ததால் வங்காளதேச வீரர்களால் ரன் குவிக்க முடியவில்லை. குறிப்பாக எலியாட், சோதி ஆகியோரின் பந்துகளை எதிர்கொள்ள முடியாமல் பேட்ஸ்மேன்கள் திணறினர்.

தமிம் இக்பால் (3), முகமது மிதுன் (11), சபிர் ரஹ்மான் (12), சாகிப் அல் அசன் (2) சவுமியா சர்க்கார் (6) ஆகிய முன்னணி பேட்ஸ்மேன்கள்கூட சோபிக்க தவறினர். அதிக பட்சமாக ஷுவகதா ஹோம் 16 ரன்கள் (நாட் அவுட்) எடுத்தார். மற்றவர்கள் வந்த வேகத்தில் பெவிலியன் திரும்ப, வங்காளதேசம் 15.4 ஓவர்களில் 70 ரன்களில் சுருண்டது. இதனால், 75 ரன்கள் வித்தியாசத்தில் நியூசிலாந்து அபார வெற்றி பெற்றது.

நியூசிலாந்த அணி ஏற்கனவே அரையிறுதிக்கு தகுதி பெற்றுவிட்டது. சூப்பர் 10 சுற்றில் அனைத்து ஆட்டங்களிலும் வென்றுள்ள நியூசிலாந்து 8 புள்ளிகளுடன் குரூப்-2ல் முதலிடத்தில் உள்ளது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY