கண்ணீர் விட்டழுத முன்னாள் பிரதமர் டி.எம். ஜயரத்ன: காரணம் என்ன?

0
153

ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியை யாரும் பிளவுப்படுத்த வேண்டாம் என முன்னாள் பிரதமர் டி.எம். ஜயரத்ன கண்ணீர் விட்டு அழுதவாறு கோரிக்கை விடுத்தார்.

முன்னாள் ஜனாதிபதிகளான சந்திரிக்கா, மஹிந்த ராஜபக்ச மற்றும் தற்போதைய ஜனாதிபதி மைத்திரிபால ஆகியோரிடம் இந்தக் கோரிக்கையை விடுத்தார்.

கண்டியில் இடம்பெற்ற நிகழ்வு ஒன்றில் உரையாற்றிய அவர், ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தற்போதைய நிலை குறித்து தாம் கவலை கொள்வதாக தெரிவித்துள்ளார்

இந்தநிலையில் தாம் முன்னாள் ஜனாதிபதிகளான சந்திரிக்கா, மஹிந்த மற்றும் ஜனாதிபதி மைத்திரிபால ஆகியோரை தனிப்பட்ட ரீதியில் சந்தித்து தமது கோரிக்கையை விடுத்ததாக ஜெயரத்ன குறிப்பிட்டுள்ளார்.

இந்த தலைவர்கள் மூவரும் ஒன்றுப்பட்டால் மாத்திரமே வருகின்ற தேர்தலில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி வெற்றிபெற முடியும் என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

LEAVE A REPLY