தென்கொரியாவை சாம்பலாக்குவோம்: வடகொரிய அதிபர் கிம் எச்சரிக்கை

0
167

தென்கொரியாவை சாம்பலாக்கி விடுவோம் என்று வடகொரிய அதிபர் கிம் ஜோங்-உன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

வடகொரியா அண்மையில் ஹைட்ரஜன் குண்டு சோதனையை நடத்தியது. மேலும் நீண்ட தொலைவு பாயும் ஏவுகணைகளை யும் சோதித்துப் பார்த்தது. இதற்கு அமெரிக்கா உட்பட உலக நாடுகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளன.

வடகொரியாவின் அணுஆயுத அச்சுறுத்தலைத் தொடர்ந்து தென் கொரியாவும் அமெரிக்காவும் இணைந்து கொரிய எல்லைப் பகுதி களில் கடந்த மார்ச் 7-ம் தேதி முதல் போர் ஒத்திகையில் ஈடுபட்டு வருகின்றன.

இதுகுறித்து வடகொரியாவின் அதிகாரபூர்வ ஊடகமான கேசிஎன்ஏ நேற்று வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: எதிரி நாடுகள் எங்களுக்கு சவால் விடுக்கின்றன. அதற்கு நாங்கள் அஞ்ச மாட்டோம். போர் மூண்டால் தென்கொரியா தலைநகர் சியோல் உட்பட அந்த நாடு முழுவதையும் எரித்து சாம்பலாக்குவோம். தற்காப்புக்காக வடகொரிய ராணுவமும் தற்போது போர் பயிற்சியில் ஈடுபட்டு வருகிறது.

இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

புதிதாக சோதனை நடத்திய ஹைட்ரஜன் குண்டு மூலம் ஒட்டு மொத்த அமெரிக்காவையும் அழித்துவிடுவோம் என்று வட கொரியா முன்னர் எச்சரிக்கை விடுத் தது நினைவுகூரத்தக்கது.

LEAVE A REPLY