காத்தான்குடியில் செப்பனிடப்படாத வீதிகளை துரிதகதியில் செப்பனிட ஷிப்லி பாறுக் நடவடிக்கைகளை மேற்கொண்டார்

0
168

M.T. ஹைதர் அலி

கிழக்கு மாகாண சபை உறுப்பினர் பொறியியலாளர் ஷிப்லி பாறூக் 2016.03.24ஆந்திகதி வியாழக்கிழமை கள விஜயமொன்றினை மேற்கொண்டு மட்டக்களப்பு மாவட்டத்தின் காத்தான்குடி நகர சபைக்குட்பட்ட சில வீதிகள் செப்பனிடப்படாமல் இருப்பதனை பார்வையிட்டதுடன் அதனை மிக விரைவாக செப்பனிட்டு மக்கள் பாவனைக்கு வழங்குவதற்கான முன்னெடுப்புகளையும் மேற்கொண்டு வருகின்றார்.

இதனடிப்படையில் நகர சபை தொழிநுட்ப உத்தியோகத்தர்களுக்கு இது சம்பந்தமாக செயற்படுத்த வேன்டிய விடயங்களை அறிவுறுத்தியதோடு, ஆலோசனைகளையும் வழங்கினார். மக்கள் பயனிப்பதற்கு முகங்கொடுக்கும் அசௌகரியங்களையும், அவஸ்தைகளையும் தீர்ப்பதற்கு செப்பனிப்பட வேண்டிய இன்னும் பல வீதிகளை நேரில் சென்று பார்வையிட்டதுடன் அவ்வீதிகளின் நிலைப்பாட்டினையும் அறிந்து கொண்டார்.

அதனைத் தொடர்ந்து மாகாண சபை உறுப்பினர் பொறியியலாளர் ஷிப்லி பாறுக் நகர சபையின் தொழிநுட்ப அதிகாரிகளுடன் இணைந்து முன்னுரிமைப்படுத்த வேண்டிய வீதிகளை பட்டியலிட்டு அவ்வீதிகளை அளவெடுத்ததுடன் செப்பனிடுதலுக்கு தேவையான முழு மதிப்பீட்டினையும் மேற்கொண்டு அவ்வீதிகளை வெகுவிரைவில் செப்பனிட்டு கொடுக்குமாறு நகர சபை அதிகாரிகளை வேண்டிக் கொண்டதுடன் தொழிநுட்ப அதிகாரிகளுக்கு ஆலோசனைகளை வழங்கி பணிப்புரையினை விடுத்தார்.

1c3c8e2d-b957-4a83-86cb-0812383ff0b7 3fba5714-9eac-4268-afbd-9ab236f0b586 6d2b6f1d-4664-4b95-a101-4499bb27c214 07b53989-2f82-48a1-bd22-2f7e6c80e163 025d1074-dac3-4a8c-94f8-79db0a8657a0 c48bb1c4-71b0-4599-b649-694fc51bd43a c424b6bd-c233-4cee-9e4c-60364dcafcdb

LEAVE A REPLY