சாய்ந்தமருதில் மாபெரும் இரத்தான முகாம்

0
98

(எம்.எஸ்.எம்.சாஹிர்)

சாய்ந்தமருது ஜாமிஉல் இஸ்லாஹ் ஜும்ஆப் பள்ளிவாசல் நிர்வாகிகளால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள இரத்ததான முகாம் எதிர்வரும் 27ஆம் திகதி ஞாயிற்றுக் கிழமை சாய்ந்தமருது ஜாமிஉல் இஸ்லாஹ் ஜும்ஆப் பள்ளிவாசலில் இடம் பெறவுள்ளதாக பள்ளிவாசலின் தலைவர் எஸ்.எம்.இனாமுல்லா தெரிவித்தார்.

“உயிர் காக்க உதிரம் கொடுப்போம்” எனும் தொனிப் பொருளில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள இந்த இரத்ததான முகாமுக்கு வயது வந்த ஆண், பெண் இருபாலாரும் கலந்து கொண்டு தமது பங்களிப்பை வழங்கலாமென ஏற்பாட்டுக் குழுவினர் அறிவித்துள்ளனர்.

இரத்தானம் செய்ய விரும்புவோர் 077 – 9533723, 077 – 3754226 என்ற தொலைபேசி இலக்கங்களோடு தொடர்பு கொண்டு முன் பதிவு செய்து கொள்ளுமாறு வேண்டிக் கொள்ளப்படுகின்றனர்.

LEAVE A REPLY