தமிழ் மாணவர்களின் கல்விக்கு உதவிக்கரம் நீட்டுகிறது NFGG

0
168

மஞ்செந்தொடுவாய் பிரதேசத்தில் அமைந்துள்ள தமிழ் பாடசாலைகளின் நிலைமைகளை நேரில் கண்டறியும் விஜயம் ஒன்றினை நல்லாட்சிக்கான தேசிய முன்னணி(NFGG)யின் தவிசாளர் பொறியளாளர் அப்துர்ரஹ்மான் மேற்கொண்டார்.

காத்தான்குடியின் வடக்கு எல்லையில் அமையப்பெற்றுள்ள இப்பாடசாலைகளுக்கான இவ்விஜயத்தில் மட்டக்களப்பு மாநகர சபையின் முன்னாள் உறுப்பினர் N K றம்ழான் மற்றும் NFGGயின் சிரேஸ்ட உறுப்பினரான A S M ஹில்மி ஆகியேரும் பங்குபற்றினர்.

மஞ்செந்தொடுவாய் சாரதா வித்தியாலயத்திற்கு முதலாவதாக விஜயம் செய்த அப்துர்ரஹ்மான் அதன் அதிபர், மற்றும் ஆசிரியர்களேடு அப்பாடசாலை கல்வி நிலைமை தொடர்பாக விரிவாக கலந்துரையாடினார். மிகவும் பின் தங்கிய நிலையில் காணப்படும் இப் பாடசாலையின் ஆரம்ப வகுப்புக்களில் வெறும் நான்கு,ஐந்து மாணவர்கள் மாத்திரமே கல்வி கற்கின்றனர்.

அப் பிரதேசத்தில் நிலவும் வறுமை மற்றும் பெற்றேர்களின் அறியாமை காரணமாக மாணவர்களின் பாடசாலைக்கான வரவு மிகவும் குறைவாக இருப்பதாகவும் இதனால் இருக்கின்ற மாணவர்களுக்குக் கூட அடிப்படை கல்வியைக்கூட வழங்கமுடியாத நிலை இருப்பதாகவும் அதிபர் கவலையோடு தெரிவித்தார்.

குறித்த தினத்தன்று பாடசாலைக்கு வராமல் இருந்த ஒரு மாணவனை தாம் வீடு தோடிச்சென்று தமது மேட்டார் சைக்கிளில் ஏற்றிவந்து காலை உணவும் வங்கிக்கொடுத்து வகுப்பில் அமரச்செய்து இருப்பதாக அதிபர் தெரிவித்ததானது இப்பாடசாலையின் கல்வி நிலையினை புரிந்து கொள்ள போதுமாக இருந்தது.

இவ் விபரங்களை கேட்டறிந்து கொண்ட பொறியளாளர் அப்துர்ரஹ்மான் இப் பிரதேச சமூக அபிபிருத்தி சங்கங்களையும் இணைத்துக்கொண்டு பெற்றேர்களுக்கான விழிப்பூட்டல்களையும் செய்து இப்பாடசாலைக்கான கல்வி முன்னேற்ற நடவடிக்கைகளுக்கு உதவுவதாக உறுதியளித்தார். எவராலும் கண்டு கொள்ளப்படாமல் இருந்த தமது பாடசலைக்கு தாமாக உதவ முன்வந்துள்ளமைக்கு நன்றிகளையும் பாராட்டுகளையும் தெரிவித்தனர்.

இதனை தொடர்ந்து மஞ்செந்தொடுவாய் பாரதி வித்தியாலாயத்திக்கு விஜயம் செய்த அப்துர்ரஹ்மானும் குழுவினரும் அப்பாடசாலையின் நிலமைகளையும் கேட்டறிந்து கொண்டதோடு அப்பாடசாலை மாணவர்களையும் இணைத்துக்கொண்டு கல்வி அபிபிருத்தி வேலைத்திட்டங்களை மேற்கொள்ள உள்ளதாகவும் தெரிவித்தார்.

எல்லை கிராமங்களில் வாழும் தமிழ்—முஸ்லிம் மாணவர்களை மையப்படுத்தி விஷேட கல்வி அபிபிருத்தி நடவடிக்கைகளை நல்லாட்சிக்கான தேசிய முன்னனி எதிர்வரும் ஏப்ரல் மாதம்முதல் ஆரம்பிக்க உள்ளதாக பொறியளாளர் அப்துர்ரஹ்மான் தெரிவித்துள்ளர்.

LEAVE A REPLY