இரத்தினக்கற்களை திருடிய இஸ்ரேல் பிரஜை கைது

0
134

தெஹிவளை பிரதேசத்திலுள்ள வர்த்தக நிலையமொன்றிலிருந்து இரத்தினக்கற்களை திருடிய இஸ்ரேல் பிரஜையொருவரை கைது செய்வதற்கான விசாரணைகளை பொலிஸார் ஆரம்பித்துள்ளனர்.

குறித்த வர்த்தக நிலையத்தின் பெட்டகத்திலிருந்து 30 முதல் 35 வரையான இரத்தினக்கற்களை இஸ்ரேலிய பிரஜை திருடியிருக்கலாம் என சந்தேகிப்பதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

மேலும் திருடப்பட்டுள்ள இரத்தினக்கற்களின் பெறுமதி இதுவரை மதிப்பீடு செய்யப்படவில்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை சந்தேகநபரான இஸ்ரேலிய பிரஜை, குறிப்பிட்ட வர்த்தக நிலையத்துடன் நீண்டகாலமாக கொடுக்கல் வாங்கல்களில் ஈடுபட்டு வந்துள்ளதாகவும் பொலிஸார் மேலும் தெரிவித்துள்ளனர்.

LEAVE A REPLY