மழை வீழ்ச்சி இன்மையால் நீர்த்தேக்கங்கள் பலவற்றின் நீர்மட்டம் வீழ்ச்சி

0
138

மலையக பிரதேசங்களுக்கு போதியளவு மழை வீழ்ச்சி கிட்டாமையால் நீர்த்தேக்கங்கள் பலவற்றின் நீர்மட்டம் வீழ்ச்சியடைந்துள்ளது.

விக்டோரியா நீர்த்தேக்கத்தின் நீர் மட்டம் தற்போது 50 வீதத்தால் வீழ்ச்சியடைந்துள்ளதாக இலங்கை மஹாவலி அதிகார சபை குறிப்பிட்டுள்ளது.

கொத்மலை நீர்த்தேக்கத்திலும் நீர் மட்டம் குறைவடைந்துள்ளதுடன், அங்கு 25 வீதம் வரை நீர் மட்டம் வீழ்ச்சியடைந்துள்ளது.

காசல்றீ, மவுஸாகலை மற்றும் சமனலவெவ ஆகிய நீர்த்தேக்கங்களிலும் வெகுவாக நீர்மட்டம் குறைவடைந்துள்ளதாக மஹாவலி அதிகார சபை சுட்டிக்காட்டியுள்ளது.

இதேவேளை, நீர்ப்பாசனத் திணைக்களத்திற்கு சொந்தமான 63 நீரேந்து பகுதிகளில் நீரின் கொள்லளவு 80 முதல் 85 வீதம் வரை காணப்படுவதாக திணைக்களத்தின் நீர் முகாமைத்துவ பணிப்பாளர் மோகன ராஜா தெரிவித்தார்.

மன்னார், வவுனியா மற்றும் மாத்தறை பிரதேசங்கள் தவிர்ந்த ஏனைய அனைத்து நீரேந்து பகுதிகளிலும் போதுமானளவு நீர் காணப்படுவதாக அவர் சுட்டிக்காட்டினார்.

இதனால் இம்முறை சிறுபோக செய்கைகளுக்காக தடையின்றி நீரை விநியோகிக்க முடியுமென அவர் நம்பிக்கை தெரிவித்தார்.

LEAVE A REPLY