பவுல்க்னெர் சாதனை

0
178

20 ஓவர் உலக கிண்ண கிரிக்கெட் போட்டியில் முன்னாள் சாம்பியன் பாகிஸ்தானை வெளியேற்றி ஆஸ்திரேலியா அரைஇறுதி வாய்ப்பை தக்கவைத்துக் கொண்டது. ஆஸ்திரேலிய வீரர் பவுல்க்னெர் 5 விக்கெட்டுகளை சாய்த்தார்.

ஆஸ்திரேலிய ஆல்-ரவுண்டரும், வேகப்பந்து வீச்சாளருமான 25 வயதான ஜேம்ஸ் பவுல்க்னெர் இந்த ஆட்டத்தில் 27 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்து 5 விக்கெட்டுகளை அள்ளினார். சர்வதேச 20 ஓவர் போட்டியில் ஆஸ்திரேலிய வீரர் ஒருவர் 5 விக்கெட்டுகளை கைப்பற்றுவது இதுவே முதல் முறையாகும். இந்த உலக கோப்பையில் 5 விக்கெட்டுகளை கபளீகரம் செய்த முதல் வீரராகவும் முத்திரை பதித்துள்ளார்.

LEAVE A REPLY