வெற்றிக்கு கடினமாக முயற்சிப்போம்: வங்காளதேச கேப்டன் மோர்தசா

0
136

நியூசிலாந்து – வங்காளதேச ஆட்டத்தின் முடிவு எந்த தாக்கத்தையும் ஏற்படுத்தப் போவதில்லை. இரு அணிகளுக்கும் இடையே ஒரே வித்தியாசம் இது தான். நியூசிலாந்து அணி தனது முதல் 3 ஆட்டங்களிலும் (இந்தியா, ஆஸ்திரேலியா, பாகிஸ்தானுக்கு எதிராக) வெற்றி பெற்று அரைஇறுதிக்கு முன்னேறி இருக்கிறது.

வங்காளதேச அணி தனது மூன்று லீக்கிலும் தோற்று அரைஇறுதி வாய்ப்பை இழந்திருக்கிறது. குறிப்பாக இந்தியாவுக்கு எதிரான ஆட்டத்தில் வெற்றியின் விளிம்புக்கு வந்து ஒரு ரன் வித்தியாசத்தில் தோற்றதை அவர்களால் ஜீரணிக்க முடிவில்லை.

வங்காளதேச கேப்டன் மோர்தசா நேற்று அளித்த பேட்டியில், ‘இந்தியாவுக்கு எதிரான தோல்வியை வார்த்தைகளால் விவரிக்க முடியாது. 3 பந்தில் 2 ரன் எடுக்க முடியாமல் போனதால், ஒட்டுமொத்த வீரர்களும் மனம் உடைந்து போனோம். ஊடகத்தினரும், மக்களும் தொடர்ந்து எங்களுக்கு ஆதரவாக இருப்பார்கள் என்று நம்புகிறேன். வீரர்கள் முந்தைய ஆட்டத்தில் செய்த தவறுகளில் இருந்து பாடம் கற்றுக்கொள்ள வேண்டும்.

நியூசிலாந்துக்கு எதிரான ஆட்டத்தில் சிறப்பாக செயல்பட்டால், நல்ல மனநிலையுடன் தாயகம் திரும்ப உதவும். வெற்றிக்கு கடினமாக முயற்சிப்போம்’ என்றார். பலம் வாய்ந்த அணிகளை சாய்த்துள்ள நியூசிலாந்தின் வீறுநடைக்கு, வங்காளதேசம் அணை போடுமா? என்பதை பார்க்கலாம்.

LEAVE A REPLY