பாகிஸ்தான் அணியில் அதிரடி மாற்றம் வரும்: வக்கார் யூனிஸ்

0
414

பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளர் வக்கார் யூனிஸ் நேற்றிரவு நிருபர்களுக்கு அளித்த பேட்டியில், ‘மற்ற அணிகளுடன் ஒப்பிடும் போது இந்த உலக கோப்பையில் எங்களது பீல்டிங் சிறப்பாக இல்லை. இந்த விஷயத்தில் தேர்வாளர்கள் தீவிர கவனம் செலுத்த வேண்டும் என்று நினைக்கிறேன். ஒரு வீரரை அணிக்கு தேர்வு செய்யும் போது, அவரது பீல்டிங் திறமையையும் பார்க்க வேண்டும். அணிக்கு இளம் ரத்தத்தை பாய்ச்ச வேண்டியது அவசியமாகும்.

இந்த உலக கோப்பை தோல்வி, பாகிஸ்தான் அணியில் நிச்சயம் மிகப்பெரிய மாற்றங்களை கொண்டு வரும். எனவே அடுத்து என்ன நடக்கும் என்பதை பார்க்கலாம்’ என்றார்.

LEAVE A REPLY