பாகிஸ்தான் கிரிக்கெட்டுக்கு நான் உதவுவதை சிலர் விரும்பவில்லை: வாசிம் அக்ரம்

0
208

பாகிஸ்தான் கிரிக்கெட்டுக்கு நான் உதவுவதை கிரிக்கெட் வாரியத்தில் இருக்கும் சிலர் விரும்பவில்லை என வாசிம் அக்ரம் குற்றம் சாட்டியுள்ளார்.

இது தொடர்பாக மேலும் அவர் கூறுகையில் “ பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்தில் இருக்கும் சிலர் கிரிக்கெட் வாரிய தலைவர் என்னுடன் பேசுவதையோ அல்லது அடுத்த பயிற்சியாளராக யாரை நியமிப்பது என்பது பற்றி ஆலோசனை கேட்பதையோ விரும்பவில்லை. இதற்கு காரணம் அவர்கள் பாகிஸ்தான் கிரிக்கெட் முன்னேற வேண்டாம் என்று நினைக்கிறார்கள்.

நான் கிரிக்கெட் வாரிய தலைவரை கொல்கத்தா விமான நிலையத்தில் சிறிது நேரம் சந்தித்து பேசினேன். ஆனால் இப்போது எனக்கு எதிர்ப்பு கிளம்பியுள்ளது. பாகிஸ்தான் கிரிக்கெட் மற்ற நாடுகளை விட பத்து ஆண்டுகள் பின்தங்கியுள்ளது. அதை நவீனப்படுத்த வேண்டியது அவசியம்” என்று தெரிவித்துள்ளார்.

LEAVE A REPLY