இரண்டாவது அணியாக மேற்கிந்திய தீவுகள் அரையிறுதிக்குத் தகுதி

0
248

உலக இருபது20 கிரிக்கெட் தொடரின் அரை இறுதிப் போட்டிக்கு மேற்கிந்தியத் தீவுகள் அணி தகுதி பெற்றுள்ளது.

இன்று நடைபெற்ற போட்டியில் தென் ஆபிரிக்க அணியை 3 விக்கெட்களால் மேற்கிந்தியத் தீவுகள் அணி வென்றது.

இதன் மூலம் மேற்கிந்திய அணியின் மொத்தப்புள்ளிகள் 6 ஆக அதிகரித்தன. இதனால் குழு 1 இலிருந்து அரை இறுதிக்குத் தெரிவான முதல் அணியாகியது மேற்கிந்தியத் தீவுகள்.

நாக்பூரில் இன்று நடைபெற்ற போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய தென் ஆபிரிக்க அணி 8 விக்கெட் இழப்புக்கு 122 ஓட்டங்களைப் பெற்றது.

பதிலுக்குத் துடுப்பெடுத்தாடிய மேற்கிந்திய அணி 19.4 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்க 123 ஓட்டங்களைப் பெற்றது.

LEAVE A REPLY