ஓய்வு குறித்து அப்ரிடி விளக்கம்

0
288

ஆட்டத்தில் நியூசிலாந்து அணி 22 ஓட்டங்கள் வித்தியாசத்தில் பாகிஸ்தானை சாய்த்தது.

இதனால் அணித்தலைவர் அப்ரிடிக்கு சிக்கல் ஏற்பட்டது. அப்போது பேட்டி அளித்த அப்ரிடி 20 ஓவர் கிரிக்கெட்டில் இது போன்று தவறுகளை செய்தால் மீள்வது கடினம்.

கடைசி லீக் ஆட்டத்தில் அவுஸ்திரேலியாவை (மார்ச் 25) சந்திக்கிறோம். தோல்வியை மறந்து விட்டு அடுத்த ஆட்டத்தில் கவனம் செலுத்த வேண்டும். எனது வாழ்க்கையில் நான் விளையாடும் கடைசி சர்வதேச போட்டியாக இது இருக்கலாம் என்று கூறினார்.

இந்நிலையில், இன்று அவுஸ்திரேலியாவுடன் போட்டியின் போது சர்வதேச போட்டிகளில் இது உங்கள் கடைசி போட்டி என கூறினீர்களே என கேட்டதற்கு, ஓய்வு பெறுவது குறித்து நான் இன்னும் முடிவு எதுவும் எடுக்கவில்லை. எனது நாட்டின் முன் அதை நான் செய்ய வேண்டும் என கூறியுள்ளார்.

LEAVE A REPLY