ஆசிரியர் பற்றாக்குறையை நிவர்த்தி செய்யுமாறு கோரி பொத்துவில் ஆர்ப்பாட்டம்

0
170

(சப்னி)

பொத்துவில்-05 ஆத்திமுனையில் அமைந்திருக்கும் கவிவாணன் எம்.ஏ.அஸீஸ் வித்தியாலயத்தில் நிலவும் ஆசிரியர் பற்றாக்குறையை நிறைவேற்றக்கோரி நேற்று (24) மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் பாடசாலையின் முன்பாக கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

107 மாணவர்கள் கல்வி கற்கும் இப்பாடசாலையில் தரம் ஒன்று தொடக்கம் எட்டு வரை இருக்கின்றது. இங்கு நான்கு ஆசிரியர்கள் மாத்திரமே இருக்கின்றனர். அடிக்கடி மேலதிகமாக இரு ஆசிரியர்கள் வருவார்கள் பின்னர் அவர்கள் இடமாற்றம் பெற்று சென்று விடுவார்கள் மூன்று மாதங்கள் கடந்தும் இவ்வாண்டில் சில பாடங்கள் இன்னும் நடைபெறவில்லை போன்ற குறைபாடுகளை முன் வைத்தே இப்போராட்டம் நடத்தப்பட்டது.

மாகாணக் கல்விப்பணிப்பாளருக்கு இது தொடர்பாக 2015.11.23 உத்தியோகபூர்மவாக கடிதம் மூலம் அறிவித்தும் இது வரையில் எந்தவிதமான தீர்வுகளும் கிடைக்கவில்லையனவும், தொலைபேசியில் தொடர்புகொண்டு கேட்ட போது தனக்கு எதுவித தகவலும் கிடைக்கவில்லை என பொய் கூறியதாகவும் பெற்றோர் குற்றம் சாட்டுகின்றனர்.

மிகவும் பின்தங்கிய கிராமத்தில் வசிக்கும் இவர்களுக்கு சீரான போக்குவரத்தோ நீர் வசதியோ கிடைக்கவில்லை. எனினும் எதிர்கால சந்ததியினரின் நலவுக்காக சீரான கல்வியை வழங்குமாறு உரிய அதிகாரிகளிடம் ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டோர் கேட்டுக்கொள்கின்றார்கள்.

LEAVE A REPLY