டி20 உலகக்கிண்ணம்: அவுஸ்திரேலியாவிடம் தோற்று வெளியேறிய பாகிஸ்தான்

0
211

பாகிஸ்தானுக்கு எதிரான உலகக்கிண்ண டி20 போட்டியில் அவுஸ்திரேலியா 20 ஓவர்களில் 4 விக்கெட்டுகள் இழப்புக்கு 193 ஓட்டங்கள் எடுத்துள்ளது.

ஸ்டீவ் ஸ்மித் 43 பந்துகளில் 7 பவுண்டரிகளுடன் 61 ஓட்டங்கள் எடுத்து நாட் அவுட்டாகத், ஓய்வு அறிவித்துள்ள ஷேன் வாட்சன் 21 பந்துகளில் 4 பவுண்டரிகள் 3 சிச்கர்களுடன் 44 ஓட்டங்கள் விளாசித்தள்ளி நாட் அவுட்டாக அவுஸ்திரேலியா 4 விக்கெட்டுகள் இழப்புக்கு 193 ஓட்டங்கள் விளாசியது.

வாட்சன், ஸ்மித் ஜோடி 5-வது விக்கெட்டுக்காக 38 பந்துகளில் 74 ஓட்டங்களை சேர்த்தது பாகிஸ்தானுக்கு பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது.

மொகமது சமிக்கு இன்று பந்துகள் சரியாக அமையவில்லை, வைடுகளை வீசியதோடும் 4 ஓவர்களில் 53 ஓட்டங்களை அவர் விட்டுக் கொடுத்தார்.

அவுஸ்திரேலிய அணியில் ஸ்மித், மேக்ஸ்வெல் கூட்டணி இணைந்து 6.2 ஓவர்களில் 62 ஓட்டங்களை 4-வது விக்கெட்டுக்காகச் சேர்க்க 13.4 ஓவர்களில் 119 ஓட்டங்கள் எடுக்கப்பட்டது.

18 பந்துகளில் ரிவர்ஸ் ஸ்வீப் பவுண்டரி மற்றும் சிக்சருடன் 30 ஓட்டங்கள் எடுத்த மேக்ஸ்வெல் இமாத் வாசிமிடம் ஆட்டமிழந்தார்.

இமாத் வாசிம் இன்று பாகிஸ்தானுக்குச் சிறப்பாக வீசி 4 ஓவர்களில் 31 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார்.

ஆமிர் 4 ஓவர்களில் 39 ஓட்டங்கள் விட்டுக் கொடுத்தார். வஹாப் 4 ஓவர்களில் 35 ஓட்டங்களுக்கு 2 விக்கெட் வீழ்த்தினார்.

மேக்ஸ்வெலுக்கு பிறகு வாட்சன், ஸ்மித் இணைந்து பாகிஸ்தான் பந்து வீச்சை புரட்டி எடுத்தனர், இறுதியில் அவுஸ்திரேலியா 193/4 என்று முடிந்தது.

பாகிஸ்தான் அணி, 8 விக்கெட் இழப்புக்கு 172 ஓட்டங்கள் எடுத்து தோல்வியுற்றுள்ளது.

LEAVE A REPLY