மு.கா.விலிருந்து இடைநிறுத்தப்பட்ட உலமாக்கள் இருவரும் உலமா சபையின் உதவியை நாடுகின்றனர்

0
203

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்­கி­ரஸின் அர­சியல் உயர்­பீ­டத்­தி­லி­ருந்து இடை­நி­றுத்தி வைக்­கப்­பட்­டுள்ள அகில இலங்கை ஜம்­இய்­யத்துல் உலமா சபையைச் சேர்ந்த இரு மௌல­வி­களும் தமக்கும் கட்­சியின் தலை­மைத்­து­வத்­துக்கும் இடை­யி­லான பிரச்­சி­னை­களைத் தீர்த்து வைக்­கு­மாறு அகில இலங்கை ஜம்­இய்­யத்துல் உலமா சபையைக் கோரு­வ­தெனத் தீர்­மா­னித்­துள்­ளனர்.

ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்­கி­ரஸின் யாப்பு குர்ஆன் ஹதீஸின் அடிப்­ப­டையில் தயா­ரிக்­கப்­பட்­டுள்­ளதால் உலமா சபை இப்­பி­ரச்­சி­னையை சமூக அர­சியல் பிரச்­சி­னை­யாகக் கருதி தீர்த்து வைப்­பதில் முன்­னின்று செயற்­பட வேண்டும்.

அத­னாலே மௌல­விகள் இரு­வரும் உலமா சபையின் மத்­தி­யஸ்தத்தை கோரு­வ­தற்கு தீர்­மா­னித்­துள்­ளனர் என முஸ்லிம் காங்­கி­ரஸின் செய­லாளர் நாயகம் எம்.ரி.ஹசன் அலி தெரி­வித்தார்.

அகில இலங்கை ஜம்­இய்­யத்துல் உல­மா­சபை அர­சியல் சார்­பற்ற ஒரு நடு­நிலை அமைப்­பாகும். அதன் உறுப்­பி­னர்கள் தீவிர அர­சி­யலில் ஈடு­படக் கூடாது என்று உலமா சபையின் யாப்பில் குறிப்­பி­டப்­பட்­டி­ருந்­தாலும், அவ்­வாறு ஈடு­பட்டால் எடுக்­கப்­ப­ட­வேண்­டிய சட்ட நட­வ­டிக்கை பற்றி குறிப்­பி­டப்­ப­ட­வில்லை. அதனால், அர­சி­யலில் ஈடு­படும் உலமா சபை உறுப்­பி­னர்­க­ளுக்கு எதி­ராக நட­வ­டிக்கை எடுப்­பதில் பிரச்­சினை உள்­ளது என உலமா சபையின் பொதுச் செய­லாளர் அஷ்ஷெய்க் எம்.ஏ.எம்.முபாரக் தெரி­வித்தார்.

ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்­கி­ரஸின் அர­சியல் உயர்­பீட பத­வி­யி­லி­ருந்து இடை­நி­றுத்தம் செய்­யப்­பட்­டுள்ள உலமா சபையின் உறுப்­பி­னர்­க­ளான மௌலவி ஏ.எல்.எம்.கலீல், மௌலவி எச்.எம்.எம்.இல்யாஸ் ஆகிய இரு­வரும் கோரும்­பட்­சத்தில் இது தொடர்பில் உலமா சபை கவனம் செலுத்தும் என்றும் அவர் கூறினார்.

மௌலவி ஏ.எல்.எம்.கலீல் நாளை இன்று உம்ரா கட­மைக்­காகச் செல்­ல­வி­ருப்­பதால் அவர் நாடு திரும்­பி­யதும் இவ்­வி­வ­காரம் தொடர்பில் உலமா சபை தலை­யி­ட­வுள்­ளது.

மௌலவி ஏ.எல்.எம்.கலீல்:
மௌலவி ஏ.எல்.எம்.கலீல் அகில இலங்கை ஜம்­இய்­யத்துல் உலமா சபையின் பொரு­ளா­ள­ராவார். இவர் முஸ்லிம் காங்­கி­ரஸின் அர­சியல் உயர்­பீட உறுப்­பி­ன­ராகப் பதவி வகித்தார்.

உயர்­பீட சூரா சபையின் தலை­வ­ரா­கவும் பதவி வகித்தார். இவர் அர­சியல் உயர்­பீட மூன்று கூட்­டங்­க­ளுக்கு சமு­க­ம­ளிக்­காமை கார­ண­மாக உயர்­பீட பத­வி­யி­லி­ருந்தும் சூரா­சபை தலைமைப் பத­வி­யி­லி­ருந்தும் இடை நிறுத்­தப்­பட்­டுள்­ள­தாக கட்­சியின் செய­லாளர் மன்சூர் ஏ.காத­ரினால் அறி­விக்­கப்­பட்­டுள்­ளது.

கூட்­டங்­க­ளுக்கு தனக்கு அழைப்பு விடுக்­கப்­பட வில்­லை­யெ­னவும், இறு­தி­யாகக் கிடைத்த அழைப்­புக்கு நான் உம்ரா கட­மையை நிறை­வேற்றச் சென்­றி­ருந்­ததால் கலந்­து­கொள்­ள­வில்லை என கலீல் மௌலவி தெரி­விக்­கிறார்.

கலந்­து­கொள்ள முடி­யாமை குறித்து செய­லா­ள­ருக்கு கடிதம் மூலம் அறி­வித்­த­தா­கவும் கடிதம் ஏற்­றுக்­கொள்­ளப்­பட்­ட­தா­கவும் அவர் கூறு­கிறார்.

மேலும் அவர் கருத்து தெரி­விக்­கையில், ஆரம்ப காலத்தில் நாட்டில் முஸ்­லிம்­க­ளுக்­காக குரல் கொடுக்க முஸ்லிம் காங்­கிரஸ் மாத்­தி­ரமே இருந்­தது.

பிற்­கா­லத்­திலே அக்­கட்­சியில் பிள­வுகள் ஏற்­பட்­டன. ஆரம்­ப­கா­லத்தில் சமூக சேவைக்­கா­கவே முஸ்லிம் காங்­கி­ரஸில் இணைந்தேன். இப்­போது கட்­சியின் செயற்­பா­டு­களில் மாற்­றங்கள் ஏற்­பட்­டு­விட்­டன. தொடர்ந்தும் கட்­சியில் இருப்­பதா என்று இப்­போது யோசிக்­கிறேன் என்றார்.

மௌலவி எச்.எம்.எம்.இல்யாஸ்:
அகில இலங்கை ஜம்­இய்­யத்துல் உலமா சபையில் உறுப்­பி­ன­ரான மெள­லவி எச்.எம்.எம்.இல்யாஸ் ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்­கி­ரஸில் உலமா சபையைப் பிர­தி­நி­தித்­து­வப்­ப­டுத்­தி­யவர். இவர் தலை­வ­ருக்கு எதி­ராக சதி செய்தார்.

தலை­வ­ருக்கு எதி­ராக தயா­ரிக்­கப்­பட்ட கடி­தத்தில் கையெ­ழுத்­திட்டார் என்­ப­தற்­கா­கவே முஸ்லிம் காங்­கி­ர­ஸி­லி­ருந்து இடை நிறுத்தி வைக்­கப்­பட்­டுள்ளார்.

இவர் ஒரு கூட்­டத்தில் தலை­வ­ருக்கு எதி­ராக பேசி­ய­வைகள். வட்ஸ் அப் மூலம் கூட்டத்தில் கலந்துகொண்ட ஒருவரால் தலைவர் ரவூப் ஹக்கீமுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது என்பதை கட்சியின் செயலாளர் மன்சூர் ஏ.காதர் உறுதி செய்துள்ளார்.

இதேவேளை தான் அவ்வாறு ஒரு கூட்டத்தில் கலந்துகொள்ளவில்லை எனவும், சதி முயற்சிகளில் ஈடுபடவில்லையெனவும், திட்டமிட்டு தான் இடைநிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாகவும் இல்யாஸ் மௌலவி மறுத்துள்ளார்.

LEAVE A REPLY