மீண்டும் ஆர். பிரேமதாசவின் கம்உதாவ திட்டம் உதயம்

0
142

வீடமைப்பு மற்றும் நிர்மாணத்துறை அமைச்சர் சஜித் பிரேமதாசவினால் முன்வைக்கப்பட்ட கம்உதாவ வேலைத் திட்டத்திற்கு அமைச்சரவை அங்கீகாரம் அளித்துள்ளது.

கம்உதாவ வேலைத் திட்டத்தின் கீழ் எதிர்வரும் 5 ஆண்டுகளில் 25 மாவட்டங்களிலும் வீடுகள் அமைக்கும் வேலைத்திட்டத்தை ஆரம்பிப்பதாக அமைச்சர் சஜித் பிரேமதாச கூறினார்.

அதன்படி இந்த ஆண்டு புதிய கம்உதாவ வேலைத்திட்டம் அனுராதபுரம் மற்றும் குருநாகல் மாவட்டங்களில் நடைபெறவுள்ளது.

முன்னாள் ஜனாதிபதி ஆர். பிரேமதாசவின் யோசனையில் கம்உதாவ திட்டம் இலங்கையில் ஆரம்பிக்கப்பட்டது. ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி ஆட்சியில் அது தேசத்திற்கு மகுடம் என்ற பெயரில் செயற்படுத்தப்பட்டது.

LEAVE A REPLY