புதிய தேசியக் கொடியை நிராகரித்த நியூஸிலாந்து மக்கள்

0
154

நியூஸிலாந்தின் தேசியக்கொடி வடிவமைப்பை மாற்றுவது தொடர்பாக நடைபெற்ற பொது வாக்கெடுப்பில், தற்போதுள்ள கொடியின் வடிவமே தொடர வேண்டும் என்று அந்நாட்டின் பெரும்பான்மையான மக்கள் தெரிவித்தனர்.

தேசியக்கொடி மாற்றம் குறித்த பொது வாக்கெடுப்பு நியூஸிலாந்தின் தேர்தல் ஆணையத்தினால் நடத்தப்பட்டது.

இந்த வாக்கெடுப்பில் தபால் மூலம் மட்டுமே பொதுமக்கள் பங்கு பெற அனுமதிக்கப்பட்டது. மார்ச் மாதம் 3 ஆம் திகதி தொடங்கிய வாக்கெடுப்பு, கடந்த வியாழக்கிழமையுடன் நிறைவடைந்தது.

45 இலட்சம் மக்கட்தொகை கொண்ட அந்நாட்டில் சுமார் 21.1 இலட்சம் பேர் மாத்திரமே வாக்களிப்பில் கலந்துகொண்டனர்.

இதில் 56.61 சதவீதத்தினர் தற்போதைய வடிவமைப்பு தொடர வேண்டும் என்று தெரிவித்திருந்தனர்.

புதிய வடிவமைப்புக்கு ஆதரவாக 43.16 சதவீதத்தினர் மட்டுமே வாக்களித்தனர்.

நியூஸிலாந்தின் தற்போதைய தேசியக்கொடி, பிரிட்டன் காலனியாதிக்கத்தை நினைவூட்டுவதாக பிரதமர் ஜோன் கீ நீண்ட காலமாகக் கூறி வருகிறார்.

இதையடுத்து, புதிய தேசியக் கொடியொன்றை ஏற்பது தொடர்பாக பொது வாக்கெடுப்பு நடத்த முடிவு செய்யப்பட்டது.

ஒன்றரை ஆண்டுகளாகப் பல்வேறு நிலைகளில் நடைபெற்ற விவாதங்களுக்குப் பிறகு புதிய வடிவங்களுக்கான ஆலோசனைகள் பெறப்பட்டன.

முதற்கட்டமாக கடந்த டிசம்பரில் நடைபெற்ற பொது வாக்கெடுப்பில் மாற்று தேசியக் கொடி வடிவமைப்பு தேர்ந்தெடுக்கப்பட்டது.

அதனை ஏற்பதா என்பது குறித்து நடைபெற்ற இறுதி வாக்கெடுப்பில், தற்போதைய வடிவமே தொடரலாம் என்று அந்நாட்டு மக்கள் பெருவாரியாகத் தெரிவித்துள்ளனர்.

LEAVE A REPLY