முஸ்லிம்களை மோசமானவர்களாக சித்தரிப்பது அநாகரிகம்: ஹிலாரி கிளிண்டன்

0
188

முஸ்லிம்களை மோசமானவர் களாக சித்தரிப்பது அநாகரிகம் என்று ஹிலாரி கிளிண்டன் கருத்து தெரிவித்துள்ளார்.

அமெரிக்காவின் குடியரசு கட்சி அதிபர் வேட்பாளர் போட்டியில் முன்னிலை வகிக்கும் டொனால்டு டிரம்ப், டெட் குரூஸ் ஆகியோர் பிரஸல்ஸ் தாக்குதலை கடுமை யாகக் கண்டித்துள்ளனர்.

‘தீவிரவாதத் தாக்குதல்களை தடுக்க ஐரோப்பாவில் வாழும் முஸ்லிம்கள் தவறிவிட்டனர், எனவே ஐரோப்பிய நாடுகள் அனைத்தும் தங்கள் எல்லைகளை மூட வேண் டும், முஸ்லிம் அகதிகளை அனு மதிக்கக்கூடாது’ என்று டொனால்டு டிரம்ப் கூறியுள்ளார்.

குடியரசு கட்சியின் மற்றொரு வேட்பாளர் டெட் குரூஸ் கூறிய போது, அண்டை வீட்டு முஸ்லிம் களின் நடவடிக்கைகளைக் கண் காணிக்க வேண்டும் என்று அறி வுறுத்தியுள்ளார்.

இருவரின் கருத்துகளுக்கும் ஜனநாயக கட்சி அதிபர் வேட்பா ளர் ஹிலாரி கிளிண்டன் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக ஸ்டான்போர்டு பல் கலைக்கழகத்தில் நேற்று முன்தினம் அவர் பேசியதாவது:

முஸ்லிம்களை கிரிமினல்கள் போன்று சித்தரிப்பது அநாகரிகம். நியூயார்க் போலீஸ் துறையில் 1000 முஸ்லிம் அதிகாரிகள் பணி யாற்றுகின்றனர். அவர்கள் கிரி மினல்களா? அமெரிக்க சமுதாயத் தில் முஸ்லிம்களை புறக்கணிக்க கூடாது. ஐ.எஸ். தீவிரவாதிகளுக்கு எதிரான போரில் அமெரிக்கர்கள் அனைவரும் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.

LEAVE A REPLY