ஐ.எஸ்.அமைப்பினால் எனது உயிருக்கு ஆபத்து: ஞானசாரதேரர்

0
183

ஐ.எஸ்.அமைப்பின் உறுப்­பி­னர்கள் எமது நாட்டில் இருக்­கி­றார்கள். இன்று இலங்கை ஐ.எஸ்ஸின் எச்­ச­ரிக்கை வல­ய­மாக மாறி­யுள்­ளது. ஐ.எஸ்ஸை விமர்­சித்­தவன் என்ற வகையில் எனது உயி­ருக்கும் ஆபத்து ஏற்­பட்­டுள்­ளது.

நாம் அன்று கூறி­ய­வைகள் இன்று உண்­மை­யாகி விட்­டன என பொது­ப­ல­சேனா அமைப்பின் பொதுச்­செ­ய­லாளர் கல­கொட அத்தே ஞான­சார தேரர் அச்சம் வெளி­யிட்டார்.

நேற்று மதியம் கிரு­லப்­ப­னை­யி­லுள்ள பௌத்த மத்­திய நிலை­யத்தில் நடை­பெற்ற ஊட­க­வி­ய­லாளர் மாநாட்டில் கலந்து கொண்டு ஊட­க­வி­ய­லா­ளர்­களின் கேள்­வி­க­ளுக்குப் பதி­ல­ளிக்­கை­யிலே அவர் இவ்­வாறு கூறினார்.

அவர் தொடர்ந்தும் பதி­ல­ளிக்­கையில் இலங்­கையில் பல பகு­தி­களில் ஐ.எஸ்.உறுப்­பி­னர்கள் இருக்­கி­றார்கள். முதல் உறுப்­பினர் கண்­டியைச் சேர்ந்­தவர். அவர் சிரி­யாவில் கொல்­லப்­பட்டார்.

தெஹி­வளை, கொலன்­னாவை, பர­க­ஹ­தெ­னிய பகு­தி­களில் இவர்கள் இருப்­ப­தாக தெரி­ய­வ­ரு­கி­றது. இவ் அமைப்­புக்கு ஆத­ர­வா­ளர்கள் கிழக்கில் அதி­க­மானோர் இருக்­கி­றார்கள்.

ஐ.எஸ். அமைப்பைப் பற்றி மஹிந்த ராஜபக் ஷவின் காலத்­தி­லி­ருந்தே நாம் தக­வல்­களை வெளி­யிட்டோம். என்­றாலும் நாம் பாது­காப்புச் செய­லாளர் கோதா­பய ராஜபக் ஷவுடன் கூட்டுச் சேர்ந்து முஸ்­லிம்­களை எதிர்ப்­ப­தா­கவும் பொய்ப்­பி­ர­சாரம் செய்­வ­தா­கவும் கூறி­னார்கள். இலங்­கையில் முஸ்லிம் அடிப்­ப­டை­வா­தத்தை ஒழித்­தி­ருந்தால் நாடு இன்று ஐ.எஸ்ஸின் எச்­ச­ரிக்கை வல­ய­மாக மாறி­யி­ருக்­காது.

அமைச்சர் ரிசாத் பதி­யுதீன்
அமைச்சர் ரிசாத் பதி­யு­தீனின் பின்னால் சில அடிப்­ப­டை­வாதக் குழுக்கள் செயற்­பட்­டு­வ­ரு­கின்­றன.

இவர்­களால் பல பிரச்­சி­னைகள் உரு­வாக்­கப்­ப­டு­கின்­றன. எம்­மிடம் ஆதா­ரங்கள் இருக்­கின்­றன. இவற்றை நிரூ­பிப்­ப­தற்கு நாம் தயா­ராக இருக்­கிறோம்.

எம்­முடன் பகி­ரங்க வாதத்­துக்கு வரும்­படி நாம் முஸ்லிம் அமைச்­சர்­களை அழைக்­கிறோம். எம்­முடன் ரிசாத் பதி­யுதீன், ரவூப் ஹக்கீம், பைசர் முஸ்­தபா ஆகியோர் நேரடி விவா­தத்­துக்கு வரலாம்.

ஆனால் அசாத்­சா­லி­யுடன் விவா­திக்க நாம் தயா­ராக இல்லை. விவா­திக்க தகு­தி­யா­ன­வர்­க­ளு­டனே விவா­திக்க வேண்டும்.

மத்­ரஸா பாட­சா­லைகள்
அமைச்சர் ரிசாத் பதி­யுதீன் துருக்கி நாட்டின் உத­வி­யுடன் நாட்டில் மத்­ரஸா பாட­சா­லை­களை நிறு­வி­வ­ரு­கிறார். தற்­போது இங்கு 3000க்கும் மேற்­பட்ட மத்­ரஸா பாட­சா­லைகள் மூலம் அடிப்­ப­டை­வா­தமே போதிக்­கப்­ப­டு­கி­றது. பாகிஸ்­தானில் பிர­தமர் மத்­ரஸா பாட­சா­லைகள் அடிப்­ப­டை­வா­தத்தைப் பரப்­பு­கின்­றன.

தீவி­ர­வா­தி­களை உரு­வாக்­கின்­றன என்று இரண்­டா­யி­ரத்­துக்கும் மேற்­பட்ட மத்­ரஸா பாட­சா­லை­களை மூடு­வ­தற்கு உத்­த­ர­விட்டார்.

ஆனால் அவ்­வா­றான பாட­சா­லைகள் இலங்­கையில் அதி­க­ரித்து வரு­கின்­றன.
அடிப்­ப­டை­வாத முஸ்­லிம்­களின் பெருக்கம்

அடிப்­ப­டை­வாத முஸ்­லிம்­களின் ஆக்­கி­ர­மிப்பு நாட்டின் பல பகு­தி­களில் ஏற்­பட்­டுள்­ளது. நீர்­கொ­ழும்பில் ஆயி­ரத்­துக்கும் அதி­க­மான அடிப்­ப­டை­வாத முஸ்­லிம்கள் வாட­கைக்கு வீடுகள் எடுத்து தங்­கி­யுள்­ளனர்.

அக்­கு­றணை, மாவத்­த­கம, பர­க­ஹ­தெ­னிய பிர­தே­சங்­க­ளிலும் வில்­பத்து பகு­தி­யிலும் இவ்­வா­றா­ன­வர்­களைக் காண­மு­டி­கி­றது.
இவர்கள் முழு­மை­யான தாடி­யுடன் கூடி­ய­வர்கள். புதிய மொழி பேசு­ப­வர்கள்.

எமது நாட்டில் வழங்­கப்­பட்ட சுதந்­தி­ரத்தின் கார­ண­மா­கவே இவ்­வகை புதிய முஸ்­லிம்­களைக் காண­மு­டி­கி­றது. இவர்­க­ளி­லி­ருந்தும் சம்­பி­ர­தாய முஸ்லிம்களை நாம் பாதுகாக்க வேண்டும். அதற்காகவே இந்த விபரங்களை நாம் பகிரங்கப்படுத்துகிறோம்.

இலங்கையில் பிரபாகரனை வெற்றி கொண்ட பலம்மிக்க இராணுவம் இருக்கிறது.

அதனால் ஐ.எஸ்.தீவிரவாதிகளை எம்மால் வெற்றிகொள்ள முடியும் நாம் அன்று கூறியவைகளுக்கு அரசாங்கம் செவிசாய்த்திருந்தால் எமது பாதுகாப்பு குறித்து நாம் அச்சமடையத் தேவை இருந்திருக்கிறது.

-Vidivelli-

LEAVE A REPLY