கல்முனை சாஹிராவில் 80 வீதமான மாணவர்கள் உயர்தரத்துக்குத் தெரிவு

0
220

எம்.எஸ்.எம்.சாஹிர்

தற்போது வெளியாகியுள்ள க.பொ.த. சாதாரண தரப் பரீட்சைப்பெறுபேற்றின் அடிப்படையில் கல்முனை சாஹிரா தேசியப் பாடசாலை மாணவர்கள் ஏ.ஆர்.எம். அப்ரார், ஐ.எம்.இஹ்ஸாம் அல் – ஹக், ஏ. எம். முஹம்மட் ஆதில், எம்.ஆர்.ஆசிக், யு.எல்.எம்.ஆப்ரித் ஆகிய 5 மாணவர்களும் ஆங்கில மொழி மூலமாக ஏ. அஹமட் சிபி என்ற மாணவனும் 9 பாடங்களிலும் (ஏ) அதி விசேட சித்தி பெற்றுள்ளதாக பாடசாலையின் உதவி அதிபர் எம்.எஸ்.அலிக்கான் தெரிவித்தார்

அவர் மேலும் தெரிவித்ததாவது,
11 மாணவர்கள் 8 (ஏ) சித்தியும் 10 மாணவர்கள் 7 (ஏ) சித்தியும் 12 மாணவர்கள் 6 (ஏ) சித்தியும் பெற்றதுடன் கல்முனை சாஹிரா தேசிய பாடசாலையிலிருந்து இம்முறை 80 சதவீதத்துக்கும் அதிகமான மாணவர்கள் உயர்தரப் பிரிவுகளான விஞ்ஞான, கணித, வர்த்தக, கலைப் பிரிவுகளுக்கு கல்வி கற்க தகுதி பெற்றுள்ளனர் என்றும் அவர் தெரிவித்தார்.

LEAVE A REPLY