துவிச்சக்கர வண்டிகள் வழங்கி வைப்பு!

0
184

வாழைச்சேனை நிருபர்  –

திருகோணமலை வெருகல் ஈச்சிலம்பற்று சண்பகா மகா வித்தியாலயத்தில் யுத்தத்தால் பாதிக்கப்பட்டு கல்வி பயிலும் மாணவர்களுக்கு கனடா சிடாஸ் அமைப்பினரால் துவிச்சக்கர வண்டிகள் புதன்கிழமை வழங்கி வைக்கப்பட்டது.

இப்பாடசாலைகளில் இருந்து தெரிவு செய்யப்பட்ட 05 வறிய மாணவர்களுக்கு துவிச்சக்கர வண்டி வழங்கும் நிகழ்வு வித்தியாலய கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.

பாடசாலை உதவி அதிபர் தலைமையில் நடைபெற்ற நிகழ்வில் வெருகல் பிரதேச செயலாளர் எஸ்.தயாபரன், கிழக்குப் பல்கலைக் கழக விரிவுரையாளர்களான க.சுரேஸ், கே.கிருபராசா, வணபிதா ஏ.நவரெட்ணம் மற்றும் பாடசாலை ஆசிரியர்கள், மாணவர்கள் எனப் பலர் கலந்து கொண்டனர்.

வெருகல் பிரதேசத்தில் மிகவும் தூர இடத்திலிருந்து பாடசாலைக்கு எதுவித போக்குவரத்து வசதிகளுமின்றி நடந்து வரும் மாணவர்களின் நலன் கருதி எழுபதாயிரம் ரூபாய் பெறுமதியான 05 துவிச்சக்கர வண்டிகள் வழங்கி வைக்கப்பட்டது.

இவ் உதவியை வழங்கி வைத்த கனடா சிடாஸ் அமைப்பினருக்கு தங்களுடைய நன்றிகளைத் தெரிவிப்பதாக அதிகாரிகள், பாடசாலை அதிபர்கள், மாணவர்கள், பெற்றோர்கள் தெரிவித்தனர்.

5cd94310-479c-4042-9294-b9c0cdb4a74d 8b0e1fa4-4f3b-42a2-ae93-30a74c389cf8 71cf3ba2-e479-4964-b4ea-d40c4db6e8cc 16723fe2-dc7c-481f-be41-37bc210b98fd 96204cca-0441-453f-865a-0d6b73c9ffd6 e37a73ed-7548-478e-857d-55a4f463fd30

LEAVE A REPLY