மட்டக்களப்பில் நிலவுகின்ற தின்மக்கழிவு பிரச்சினைக்கு நிரந்தரத் தீர்வு

0
259

மட்டக்களப்பு மாவட்டத்தில் நிலவுகின்ற தின்மக்கழிவு பிரச்சினைக்கு நிரந்தரத் தீர்வு ஒன்றினைப் பெற்றுக் கொள்வதற்கு யுனப்ஸ் (UNOPS) நிறுவனம் பிரதேச சபைகளுடனும் மாவட்ட செயலகத்துடனும் இணைந்து செயற்பட்டுக் கொண்டு வருகின்றது என்பதில் தான் மகிழ்ச்சி அடைகின்றேன் என்று மட்டக்களப்பு மாவட்ட செயலாளர் பி.பஸ்.எம்.சாள்ஸ் தெரிவித்தார்.

யுனப்ஸ் நிறுவனத்தின் அனுசரனையில் மாவட்ட அபிவிருத்தி நிகழ்ச்சித்திட்டத்திற்கான ஐரோப்பிய ஒன்றிய நிதியில் ஓட்டமாவடி பிரதேச சபை பிரிவில் சூடுபத்தினசேனை கிராமத்தில் அமைக்கப்பட்ட தேசிய தின்மக்கழிவு முகாமைத்துவ திட்டத்தில் சேதனைப்பசளை தயாரிக்கும் கட்டிடத்தினை திறந்து வைக்கும் நிகழ்வில் பிரதம அதிதியாக கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்சொன்னவாறு தெரிவித்தார்.

அங்கு அவர் தொடர்ந்து உரையாற்றுகையில்,
நாட்டில் பல மாவட்டங்களில் கழிவு அகற்றல் பாரிய சவாலுக்கு உட்படுத்தப்பட்டுக் கொண்டு இருக்கும் விடயம் கொழும்பு மற்றும் கண்டி போன்ற மாவட்டங்களில் கழிவு அகற்றலில் பல சிரமங்களை எதிர்நோக்க வேண்டிய நிலமையில் இருக்கின்றார்கள்.

ஆனால் மட்டக்களப்பு மாவட்டத்தைப் பொறுத்தவரை நாங்கள் தின்மக்கழிவு அகற்றலில் ஒரு நிரந்தரத் தீர்விற்கான திட்டத்தினை வகுத்து செயற்பட்டுக் கொண்டு இருக்கின்றோம் என்றும் தெரிவித்தார்.

இந் நிகழ்வில் யுனப்ஸ்  நிறுவனத்தின் திட்ட முகாமையாளர் திருமதி சிமோனிடா சிலிகாடோ, கோறளைப்பற்று பிரதேச செயலக பிரதேச செயலாளர் வீ.வாசுதேவன், கோறளைப்பற்று மத்தி பிரதேச செயலக செயலாளர் திருமதி நிஹாரா மௌஜூத், ஓட்டமாவடி பிரதேச செயலக பிரதேச செயலாளர் எம்.எம்.நௌபல், வாழைச்சேனை பிரதேச சபை செயலாளர் எஸ்.எம்.சிஹாப்தீன், ஓட்டமாவடி பிரதேச சபை செயலாளர் எஸ்.எம்.சாபி, வாகரை பிரதேச சபை செயலாளர் இந்திரகுமார், ஏறாவூர் பிரதேச சபை செயலாளர் எச்.எம்.எம்.ஹமீம் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.

இத் திட்டத்திற்கு யுனப்ஸ் நிறுவனத்தின் வழிகாட்டலில் ஐரோப்பிய ஒன்றிய நிதியில் தேசிய தின்மக்கழிவு முகாமைத்துவ திட்டத்தில் சேதனைப்பசளை தயாரிக்க அமைக்கப்பட்ட கட்டிடத்திற்கு 16மில்லியன் ரூபாவும் அதற்கு செல்வதற்கான 01.7 கிலோமீற்றர் வீதிக்கு கொங்ரீட் வீதி அமைப்பதற்கு 28 மில்லியன் ரூபாவும் ஒதுக்கப்பட்டுள்ளதாக யுனப்ஸ்  நிறுவனத்தின் தொழில் நுட்ப உத்தியோகத்தர் தெரிவித்தார்.

(வாழைச்சேனை நிருபர்)

00f1b308-f04d-4456-b24b-292bb1dd97d3 9a324dc0-653c-4d64-a95f-f84a6a4b4882 981ab842-ac77-4c1b-8b4d-e48830e94aff 13101a6b-30cf-463e-bf76-990198788120 e2109933-21da-4e1c-9193-dddb08f8857c f93eabc0-81a8-43ef-95c6-2a20a5365b57

LEAVE A REPLY