பால்நிலை அடிப்படையிலான வன்முறைகளை குறைக்கும் புதிய பிரிவு :காத்தான்குடியில் திறப்பு

0
246

பால்நிலை அடிப்படையிலான வன்முறைகளை குறைக்கும் புதிய பிரிவொன்று காத்தான்குடி தள வைத்தியசாலையில் கடந்த திங்கள் (21.03.2016) அன்று வைபவரீதியாக திறந்து வைக்கப்பட்டது. இந் நிகழ்வில் கிழக்கு மாகாண சுகாதார அமைச்சர் கௌரவ ALM. நசீர், கிழக்கு மாகாண சபை உறுப்பினர் பொறியியலாளர் ஷிப்லி பாறூக், மட்டக்களப்பு மாவட்ட பிராந்திய சுகாதார பணிப்பாளர் வைத்தியர் திருமதி K.L. நவரத்தினராஜா, ஸ்ரீ லங்கா முஸ்லின் காங்கிரசின் கொள்கைப்பரப்பு செயலாளரும் நீர்வளங்கள் நகர அபிவிருத்தி அமைச்சரின் இணைப்பாளருமான ULMN. முபீன்(BA), காத்தான்குடி ஆதார வைத்தியசாலையின் மருத்துவ அத்தியட்சகர் வைத்தியர் MSM. ஜாபீர், வைத்தியர்கள், வைத்தியசாலை அபிவிருத்தி குழு உறுப்பினர்கள் வைத்தியசாலை ஊழியர்கள் மற்றும் ஊடகவியலாளர்கள் ஆகியோர் கலந்துகொண்டனர்.

இந்நிகழ்வில் விஷேட உரையாற்றிய கிழக்கு மாகாண சபை உறுப்பினர் ஷிப்லி பாறூக்,

நான் இவ்வூரை சேர்த்தவன் என்ற வகையில் இவ்வைத்தியசாலையின் நிலை குறித்து தான் அதிகாமாக அறிந்திருக்கின்றேன், இத்தள வைத்தியசாலையின் தேவைப்பாடுகள் குறித்து பல்வேறு தருணங்களில் பல அதிகாரிகளின் கவனத்திற்கு எடுத்துச் சென்றுள்ளோம்.

மேலும் மட்டக்களப்பு மாவட்ட பிராந்திய சுகாதார பணிப்பாளராக பொறுப்பேற்றுள்ள வைத்தியர் திருமதி K.L. நவரத்தினராஜா மற்றும் கிழக்கு மாகான சுகாதார அமைச்சர் கௌரவ ALM. நசீர் ஆகியோருடைய பங்களிப்பும் உதவியும் தமக்கு அதிக பக்கபலமாக இருப்பதாகவும் குறிப்பிட்டார்.

தொடர்ந்து உரையாற்றிய அவர். மத்திய அரசின் சுகாதார அமைச்சரிடமும் கிழக்குமாகாண சுகாதார அமைச்சரிடமும் தொடர்ச்சியாக செய்துவந்த வேண்டுகோளிக்கிணங்க இவ்வருடத்தின் சுகாதார அபிவிருத்தி பணிகளுக்காக சுமார் 2 கோடியே 10 லட்சம் ரூபா நிதியினை காத்தான்குடி தள வைத்தியசாலைக்கு ஒதுக்கப்பட்டுள்ளது, இதன் மூலம் இந்த தள வைத்தியசாலையில் பல்வேறு அபிவிருத்தி திட்டங்களை மேற்கொண்டு இப்பிரதேச மக்களுக்கு சிறந்த சேவையினை வழங்குவதற்கு நடவடிக்கையினை மேற்கொண்டுவருகின்றோம்.

இருந்தாலும் இத்தள வைத்தியசாலையில் ஆளணி பற்றாக்குறை காரணமாக சுகாதார வைத்திய சேவையினை திறம்பட மேற்கொள்வதற்கு சிரமமாகவுள்ளது. எனவே இந்த ஆளணி பற்றாக்குறையினை நிவர்த்தி செய்து தரவேண்டுமென கெளரவா சுகாதார அமைச்சர் ALM. நசீர் அவர்களிடம் வேண்டிக்கொண்டார்.

இந்த வைத்தியசாலை வருகின்ற நோயாளர்களை மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு இடம்மாற்றுகின்ற ஒரு மையமாகவே அதிகமான சந்தர்பங்களில் செயற்பட்டுவருகின்றது. இதனால் நோயாளர்கள் அதிக சிரமங்களை எதிர் நோக்குகின்றனர். எதிர் காலத்தில் இந்நிலைமை மாறவேண்டும்.

மேலும் வைத்தியசாலை போக்குவரத்துக்காக விஷேட பஸ் சேவைகளை ஏற்படுத்தவும் உத்தேசிக்கப்படுகிறது. இதன் மூலம் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் சுமை குறிக்கப்படுவதோடு நோயாளர்களுக்கு ஏற்படும் அசௌகரியங்களையும் தவிர்க்க முடியும். நோயற்ற எதிர்கால சமூகம் ஒன்றை ஏற்படுத்துவதற்கு நாம் அனைவரும் ஒன்றிணைந்து அர்பணிப்புடன் செயலாற்ற வேண்டும் எனவும் தெரிவித்தார்.

58e7d5ef-c47d-4d30-b8a6-d3f85166a14b 20853760-7c62-42f3-9e87-6966c82128a3 e866fca6-fb60-4d3d-8df3-e77f7dcfb8d6 e10580fe-b84b-4027-9d87-78ae29fa94a9 fd3902c9-f3b3-41ee-b138-0637087e6386

LEAVE A REPLY