பாராளுமன்ற உறுப்பினர் ஒருவருக்கு சபாநாயகர் எச்சரிக்கை

0
173

கம்பஹா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சிசிர ஜெயக்கொடி பாராளுமன்றத்துக்குள் டோச் லைட்டை எடுத்துவர முற்பட்டதாக கூறப்படும் சம்பவம் தொடர்பில், சபாநாயகர் கரு ஜெயசூரிய எச்சரிக்கை விடுத்துள்ளார்.

இது தொடர்பில் பாராளுமன்ற உறுப்பினரிடம் விசாரணைகளை மேற்கொண்ட போதே இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக, சபாநாயகரின் ஊடகப் பிரிவு குறிப்பிட்டுள்ளது.

இதேவேளை, இந்த சம்பவத்துக்காக சிசிர ஜெயக்கொடி சபாநாயகரிடம் கவலை வெளியிட்டுள்ளார்.

LEAVE A REPLY