மாதுலுவாவே சோபித தேரரின் மரணம் தொடர்பில் தம்மாலோக தேரர், கம்மன்பிலவிடம் விசாரணை

0
235

மாது­லு­வாவே சோபித தேர­ரை படு­கொலை செய்ய வேண்­டிய தேவை மஹிந்த ராஜ­ப­க் ஷவின் அர­சாங்­கத்­திற்கே காணப்­பட்­டது. ஆகவே பாரா­ளு­மன்ற உறுப்­பினர் உதய கம்­மன்­பில மற்றும் உடுவே தம்­மா­லோக தேரர் ஆகி­யோ­ரிடம் விசா­ரணை நடத்தி உண்­மை­களை கண்­ட­றி­யு­மாறு வலி­யு­றுத்தி ஊழல் எதிர்ப்புக் குரல் அமைப்பின் தலைவர் உல­பனே சுமங்­கள தேரர் குற்­ற­வியல் விசா­ரணை திணைக்­க­ளத்தில் முறைப்­பாட்டை பதிவு செய்தார்.

ஊழல் எதிர்ப்பு குரல் மற்றும் சிவில் அமைப்­பு­களை பிர­தி­நி­தித்­துவம் செய்து பலர் நேற்று குற்­ற­வியல் விசா­ரணை திணைக்­க­ளத்­திற்கு சென்று இந்த விடயம் தொடர்பில் விசா­ர­ணை­க­ளுக்கு வலி­யு­றுத்­தினர்.

இதன் போது ஊட­கங்­க­ளுக்கு கருத்து தெரி­வித்த உல­பனே சுமங்­கள தேரர் கூறு­கையில், மாது­லு­வாவே சோபித தேரரின் மரணம் இயற்­கைக்கு முர­ணா­னது. அவர் படு­கொலை செய்­யப்­பட்­டுள்­ள­தாக பாரா­ளு­மன்ற உறுப்­பினர் உதய கம்­மன்­பில மற்றும் உடுவே தம்­மா­லோக தேரர் ஆகியோர் கூறி வரு­கின்­றனர். அவ்­வாறு அவர்கள் கூறு­வ­தற்கு அவர்­க­ளிடம் ஏதேனும் கார­ணங்கள் அல்­லது ஆதா­ரங்கள் காணப்­பட வேண்டும்.

எனவே குற்­ற­வியல் விசா­ரணை திணைக்­களம் இது குறித்து விச­ாரணை செய்ய வேண்டும் என்­பதை வலி­யு­றுத்தி நாங்கள் முறைப்­பாடு செய்­துள்ளோம். உண்­மையில் மாது­லு­வாவே சோபித தேரரை படு­கொலை செய்ய வேண்­டிய தேவை கடந்த அர­சாங்­கத்­திற்கே காணப்­பட்­டது. முன்னாள் இரா­ணுவ தள­பதி சரத் பொன்­சேகா சிறையில் அடைக்­கப்­பட்ட போது அவ­ரது விடு­த­லையை வலி­யு­றுத்தி நாங்கள் கண்­டிக்கு சென்றோம். இதன் போது வாகன விபத்தை ஏற்­ப­டுத்தி மாது­லு­வாவே சோபித தேரரை படு­கொலை செய்­வ­தற்கு மஹிந்த ராஜ­ப­க் ஷ முயற்­சித்தார்.

எனவே தற்­போது ஏன் திடீரென உதய கம்­மன்­பில மற்றும் உடுவே தம்­மா­லோக தேரர் ஆகியோர் மாது­லு­வாவே சோபித தேரர் படு­கொலை செய்­யப்­பட்­டுள்­ள­தாக கூற வேண்டும் என்ற சந்­தேகம் நாட்டு மக்­க­ளுக்கு காணப்­ப­டு­கின்­றது. ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன மற்றும் பிர­தமர் ரணில் விக்­கிர­ம­சிங்க ஆகி­யோரின் தலை­மை­யி­லான நல்­லாட்சி அர­சாங்­கத்தின் ஊடாக நாட்டில் ஏற்­ப­டுத்தக் கூடிய சிறந்த விட­யங்கள் குறித்து மாது­லு­வாவே சோபித தேரர் வலி­யு­றுத்­தினார்.

அவர்­க­ளுடன் ஒன்­றி­ணைந்து வெற்றிப் பய­ணத்தை முன்­னெ­டுத்தார். எனவே மாது­லு­வாவே சோபித தேரரை கொலை செய்ய வேண்­டிய தேவை ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன மற்றும் பிர­தமர் ரணில் விக்கி­ர­ம­சிங்­க­விற்கு காணப்­பட வில்லை. அந்த தேவை கடந்த அர­சாங்­கத்­திற்கே காணப்­பட்­டது.

சட்­ட­வி­ரோ­த­மான முறையில் யானை வைத்­தி­ருந்­தமை தொடர்பில் கைது செய்யப்பட்டு பிணையில் விடுதலையான பின்னர் மாதுலுவாவே சோபித தேரரின் மரணம் தொடர்பில் சர்ச்சையை ஏற்படுத்தும் வகையில் கருத்துக்களை கூறுவதன் உண்மையான நோக்கங்கள் கண்டறியப்பட வேண்டும் என குறிப்பிட்டார்.

LEAVE A REPLY