சிறுமியை கர்ப்பமாக்கிய வயோதிப பூசகர் கைது

0
244

பொத்துவில் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கோமாரி மணல்சேனை பகுதியைச் சேர்ந்த (வயது 65) நிரம்பிய பூசகரே இவ்வாறு கைது செய்யப்பட்டு விளக்க மறியலில் வைக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

பிரதேசத்தைச் சேர்ந்த 16 வயதுடைய சிறுமி ஒருவருடன் தொடர்புகளை வைத்திருந்த குறித்த பூசகர், இச்சிறுமிக்கு ஆபாச வார்த்தைகளைக் கூறி பழகி வந்துள்ளதோடு பாலியல் துஷ்பிரயோகத்திலும் ஈடுபட்டுள்ளார்.

பின்னர் இச்சிறுமிக்கு ஏற்பட்ட வயிற்று வலியினையடுத்து இவருடைய தாயார் இச்சிறுமியை பொத்துவில் வைத்தியசாலையில் அனுமதித்ததைத் தொடர்ந்து வைத்தியர்கள் மேற்கொண்ட உடல் பரிசோதனைக்கிணங்க சிறுமி தாய்மை அடைந்திருக்கின்ற விடயம் தெரியவந்துள்ளது.

சிறுமியின் தாயார் பொத்துவில் பொலிஸ் நிலையத்தில் செய்த முறைப்பாடுகளுக்கமைய பூசகர் கைது செய்யப்பட்டுள்ளார்.

இவர் ஏப்ரல் மாதம் 5 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளதாக பொத்துவில் பொலிஸார் தெரிவித்தனர்.

(Virakesari)

LEAVE A REPLY