20 ஓவர் உலக கிண்ணம்: தென்ஆப்பிரிக்கா-வெஸ்ட் இண்டீஸ் இன்று மோதல்

0
136

இரவு 7.30 மணிக்கு மராட்டிய மாநிலம் நாக்பூரில் நடக்கும் மற்றொரு ஆட்டத்தில் (குரூப்1) வெஸ்ட் இண்டீஸ்- தென்ஆப்பிரிக்கா அணிகள் மல்லுகட்டுகின்றன.

ஏற்கனவே இங்கிலாந்து, இலங்கை அணிகளை வீழ்த்தியுள்ள டேரன் சேமி தலைமையிலான வெஸ்ட் இண்டீஸ் அணி இன்றைய ஆட்டத்திலும் வெற்றி பெற்று அரைஇறுதியை உறுதி செய்யும் முனைப்பில் இருக்கிறது. தசைப்பிடிப்பால் கடந்த ஆட்டத்தில் பேட் செய்ய வராத அதிரடி மன்னன் கிறிஸ் கெய்ல் உடல்தகுதி பெற்று அசத்த காத்திருக்கிறார்.

2 ஆட்டத்தில் ஒன்றில் வெற்றியும், ஒன்றில் தோல்வியும் கண்டுள்ள பாப் டு பிளிஸ்சிஸ் தலைமையிலான தென்ஆப்பிரிக்காவுக்கு இது வாழ்வா-சாவா மோதலாகும். இதில் வெற்றி பெற்றால் மட்டுமே அரைஇறுதி வாய்ப்பில் நீடிக்க முடியும். காயத்தால் ஆல்-ரவுண்டர் டுமினி இந்த ஆட்டத்தில் ஆடாதது அந்த அணிக்கு சற்று பின்னடைவாகும். அவருக்கு பதிலாக சுழற்பந்து வீச்சாளர் ஆரோன் பாங்கிசோ இடம் பெறுவார்.

நாக்பூர் ஆடுகளம், முழுக்க முழுக்க சுழற்பந்து வீச்சின் ஆதிக்கம் கொண்டது. இதனால் இந்த ஆட்டத்தில் சுழற்பந்து வீச்சாளர்கள் தாக்கத்தை ஏற்படுத்துவார்கள் என்பதில் சந்தேகமில்லை. அந்த வகையில் தென்ஆப்பிரிக்க அணியில் இம்ரான் தாரும், வெஸ்ட் இண்டீஸ் அணியில் பத்ரீயும் பிரதான அஸ்திரமாக இருப்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இரு அணிகளின் உத்தேச பட்டியல் வருமாறு:-

தென்ஆப்பிரிக்கா: குயின்டான் டி காக், அம்லா, பாப் டு பிளிஸ்சிஸ் (கேப்டன்), டிவில்லியர்ஸ், ரோசவ் அல்லது பெஹர்டைன், டேவிட் மில்லர், டேவிட் வைஸ் அல்லது கிறிஸ் மோரிஸ், கைல் அப்போட், ரபடா, ஆரோன் பாங்கிசோ, இம்ரான் தார்.

வெஸ்ட் இண்டீஸ்: கெய்ல், ஜான்சன் சார்லஸ், பிளட்சர், சாமுவேல்ஸ், தினேஷ் ராம்டின், ஆந்த்ரே ரஸ்செல், வெய்ன் பிராவோ, டேரன் சேமி (கேப்டன்), கார்லஸ் பிராத்வெய்ட், பத்ரீ, சுலிமான் பென்.

தென்ஆப்பிரிக்கா-வெஸ்ட் இண்டீஸ் அணிகள் இதுவரை 9 ஆட்டங்களில் நேருக்கு நேர் சந்தித்துள்ளன. அதில் 6-ல் தென்ஆப்பிரிக்காவும், 3-ல் வெஸ்ட் இண்டீசும் வெற்றி பெற்றுள்ளன.

LEAVE A REPLY