(Innalillah) இஸ்ரேல் படையினரால் மேலும் 2 பலஸ்தீனர்கள் சுட்டுக் கொலை

0
82

ஆக்கிரமிப்பு மேற்குக் கரையில் கத்திக்குத்து தாக்குதல் நடத்தி ஒரு இஸ்ரேல் வீரர் மீது காயம் ஏற்படுத்திய குற்றச்சாட்டில் நேற்று இரு பலஸ்தீனர்கள் சுட்டுக் கொல்லப்பட்டனர்.

ஹெப்ரூன் பழைய நகரில் இஸ்ரேலிய இராணுவ சோதனைச்சாவடி ஒன்றுக்கு அருகிலேயே இந்த தாக்குதல் இடம்பெற்றுள்ளது. இரண்டு தாக்குதல்தாரிகள் கத்திக்குத்து தக்குதலுக்கு முயன்றபோது படையினர் துப்பாக்கிச் சூடு நடத்தினர் என்று இஸ்ரேலிய இராணுவப் பேச்சாளர் குறிப்பிட்டுள்ளார்.

இதன்போது சிறு காயத்திற்கு உள்ளான இஸ்ரேல் வீரர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். 20 மற்றும் 21 வயது பலஸ்தீன இளைஞர்களே கொல்லப்பட்டுள்ளனர்.

சம்பவத்தை கண்ட ஒருவர் பலஸ்தீன மஆன் செய்திச் சேவைக்கு விபரிக்கும்போது, “துப்பாக்கிச்சத்தம் கெட்டதும் என்னவேன்று வெளியெ வந்து பார்த்தபோது, இஸ்ரேலிய படையினர் பலரும் கூச்சலிட்டுக் கொண்டிருந்தார்கள். இரு இளைஞர்கள் கீழே இருந்தனர். படை வீரர் ஒருவர் இளைஞர் ஒருவரின் அருகில் சென்று கூச்சலிட்டுக் கொண்டு நெருங்கிய தூரத்தில் சுட்டார்.”

“அரைமணி நேரத்திற்கு பின்னர் இரு இளைஞர்களின் சடலங்களையும் கறுப்பு துணியால் மூடி இஸ்ரேல் படையினர் எங்கேயோ எடுத்துச் சென்றார்கள். அப்போது (காயத்திற்குள்ளான) வீரரை சூழ்ந்த ஏனைய படையினர் அவரது மேலங்கியை அகற்றுவதை பார்க்க முடிந்தது” என்று அவர் விபரித்தார்.

சம்பவம் இடம்பெற்றிருக்கும் ஹெப்ரூன் இராணுவ சோதனைச்சாவடி பகுதியில் பலஸ்தீனர்களின் நடமாட்டங்கள் முழுமையாக கட்டுப்படுத்தப்பட்டுள்ளது.

கடந்த ஒக்டோபர் தொடக்கம் நீடித்துவரும் பதற்ற சூழலில் குறைந்தது 203 பலஸ்தீனர்கள் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளனர். இதில் பெரும்பாலானவர்கள் சிறிய தாக்குதலுக்கு முயன்றதாக துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்கானவர்களாவர். இதே காலப்பிரிவில் சுமார் 30 இஸ்ரேலியர் கொல்லப்பட்டுள்ளனர்.

(Thinakaran)

LEAVE A REPLY