(Poem) சோஷியல் மீடியா

0
76

ஆமர் சந்தியில்
அடுத்த மனிதர்கள்
அப்படியே நிற்க
அவன் மட்டும் போகிறான்
-Google map

அவனின் தந்தை
ஆக்ஸிடன்ட் ஆனதை
நான் விரும்ப வேண்டுமென
நண்பன் விரும்பினான்
-fb like

அவனுக்கு வந்ததை
அள்ளி அள்ளி
அடுத்தவர்க்கு கொடுத்தான்
-WhatsApp share

தொலைந்ததைத் தேடவில்லை
தேடியே தொலைந்தான்
-Google search

மக்கா படம் பார்க்க வந்தவனை
மலையாளத்து
அக்கா படமும் பார்க்கச் செய்யும்
YouTube

(நிஷவ்ஸ் )

LEAVE A REPLY