உலக காசநோய் தினம் இன்று!

0
37

காச நோய் பரவுதல் பற்றியும், அதைத் தடுப்பது குறித்தும் விழிப்புணர்வை ஏற்படுத்தும் விதமாக ஒவ்வொரு ஆண்டும் மார்ச் மாதம் 24 ஆம் திகதியாகிய இன்று, சர்வதேச காச நோய் தினம் கடைபிடிக்கப்படுகிறது.
டியூப்பர்குளோசிஸ் பாக்டீரியா’ நுண்கிருமிகளால் காற்றின் மூலம் காசநோய் பரவுகிறது. இது பொதுவாக நுரையீரலை பாதிக்கும்.

ஆனாலும் மூளை, கிட்னி, முதுகெலும்பு ஆகிய உடலின் மற்ற பாகங்களையும் பாதிக்கிறது. அவ்வகையில் இவ்வாண்டு காசநோய் தினத்துக்கான தொனிப்பொருளாக “காசநோயை முற்றாக ஒழிப்பதற்கு ஒன்றிணைவோம்” என்ற தொனிப்பொருளின் கீழ் அனுஷ்டிக்கப்படுகின்றது.

தொடர்ந்து சளி இருப்பது, எடை குறைவு, காய்ச்சல், மார்பு வலி, இரவில் வியர்ப்பது, கால், கைகள் பலம் குன்றுதல் போன்றவை காசநோய்க்கான அறிகுறிகளாக இனங்காணப்பட்டுள்ளன. நோய் பாதிக்கப்பட்டவர் இருமுவதன் (சளி) மூலம் இந்நோய் மற்றவர்களுக்கும் பரவும் வாய்ப்புள்ளது.

ஆண்டுதோறும் 90 லட்சத்திற்கும் மேற்பட்டோருக்கு, ஏற்கனவே காசநோய் உள்ளவர்களிடமிருந்து பரவுகின்றது. இந்நோயால் ஆண்டுதோறும் 17 லட்சம் பேர் உயிரிழக்கின்றனர். பெரும்பாலானோர் ஏழை நாடுகளைச் சேர்ந்தவர்கள். காசநோயின் பாதிப்பு, உலகம் முழுவதும் உள்ளது. உலக மக்கள் தொகையில் மூன்றில் ஒரு பங்கு பேர், இந்நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இந்தியா, சீனா, தென்னாபிரிக்கா, நைஜீரியா மற்றும் இந்தோனேசியா உள்ளிட்ட 22 நாடுகளில் காசநோயால் புதிதாக பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை அதிகம். ஆரம்பத்திலேயே இதற்கு சிகிச்சை மேற்கொள்வது, நீண்ட கால சிகிச்சை ஆகியவை இந்நோயிலிருந்து பாதுகாக்கும் நடவடிக்கைகளாகும். காச நோய் உள்ளவர்கள், தயங்காமல மருத்துவர்களை அணுகி சிகிச்சை எடுத்துக் கொள்ளல் ஆகியன இந்நோயிலிருந்து பாதுகாத்துக் கொள்வதற்கான சிறந்த முறையாகும்.

அவ்வகையில் அரசாங்கம் தனியார் நிறுவனங்கள் புத்திஜீவிகள் என அனைவரும் காச நோய் பற்றிய விழிப்புணர்வை மக்களிடம் ஏற்படுத்தி, மக்களை காக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

LEAVE A REPLY