நூல­கத்தில் பெற்ற புத்­த­கத்தை 49 வரு­டங்­களின் பின் ஒப்­ப­டைத்த நபர்

0
126

அமெ­ரிக்­காவைச் சேர்ந்த நபர் ஒருவர் நூல­க­மொன்றில் இரவல் வாங்­கிய புத்­த­க­மொன்றை 49 வரு­டங்­களின் பின்னர் திருப்பிக் கொடுத்­துள்ளார்.

ஜேம்ஸ் பிலிப்ஸ் எனும் இவர், ஒஹையோ மாநி­லத்­தி­லுள்ள டேய்ட்டன் பல்­க­லைக்­க­ழக நூல­கத்­தி­லி­ருந்து 1967 ஆம் ஆண்டு இப்­ புத்­த­கத்தை இரவல் வாங்­கி­யி­ருந்தார். அப்­போது மேற்­படி பல்­க­லைக்­க­ழ­கத்தின் முதலாம் வருட மாண­வ­ராக அவர் இருந்தார்.

இப்­ புத்­தகம் திருப்பிக் கொடுக்­கப்­பட வேண்­டிய நாள் கடந்து, வரு­டங்­களும் கடந்து கொண்­டி­ருந்­த­போ­திலும் அதை ஜேம்ஸ் பிலிப்ஸ் திருப்­பிக்­கொ­டுக்­க­வில்லை.

இந்­ நி­லையில், 49 வரு­டங்கள் கடந்த நிலையில், அண்­மையில் அவர் மேற்­படி புத்­த­கத்தை, நூல­கத்­திடம் ஒப்­ப­டைத்­துள்ளார். இந்த நீண்ட கால தாம­தத்­துக்­காக மன்­னிப்புக் கோரி எழு­தப்­பட்ட குறிப்­பொன்­றுடன் ஜேம்ஸ் அப்­ புத்­த­கத்தை ஒப்­ப­டைத்தார்.

தான் மேற்­படி பல்­க­லைக்­க­ழ­கத்தில் முதலாம் வருட மாண­வ­ராக இருந்­த­வே­ளை­யி­லேயே இப்­ புத்­த­கத்தை தீவி­ர­மாக தேடி­ய­தா­கவும் ஆனால், அது இவ்­வ­ளவு காலமும் தொலைந்­து­போ­யி­ருந்­தது எனவும் அவர் குறிப்­பிட்­டி­ருந்தார்.

ஜேம்ஸ் பிலிப்ஸின் மன்­னிப்புக் கோரலை ஏற்­றுக்­கொண்ட பல்கலைக்கழக அதிகாரிகள், இத் தாமதத்துக்காக செலுத்தப்பட வேண்டிய சுமார் 50,000 ரூபா அபராதத் தொகையை இரத்துச் செய்துள்ளனர்.

LEAVE A REPLY