மஷுர் மௌலானா நினைவாக மருதமுனை மஸ்ஜிதுல் கபீர் பள்ளிக்கு நிதி அன்பளிப்பு

0
167

– எம்.எஸ்.எம்.சாஹிர்-

முன்னாள் செனட்டர் மர்ஹும் எஸ். இஷட். எம். மஷுர் மௌலானாவின் பெயரில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸால் மருதமுனை மஸ்ஜிதுல் கபீர் பள்ளிவாசலுக்கு 25 இலட்சம் ரூபா அன்பளிப்புச் செய்யப்பட்டது.

இந்த நிதியுடன் இப்பள்ளிவாசலின் மூன்றாம் கட்டட நிர்மாண வேலைகளைத் தொடருவதற்காக தனவந்தர்களால் வழங்கப்பட்ட நிதியைப் பயன்படுத்தி கடந்த 20ஆம் திகதி நிர்மாணப் பணிகள் ஆரம்பித்து வைக்கப்பட்டன.

இதில் பிரதம அதிதியாக கிழக்கு மாகாண மாகாண சபை உறுப்பினர் ஆரிப் சம்சுடீன், விசேட அதிதிகளாக மஷுர் மௌலானாவின் புத்திரர் எம்.எம்.எஸ். இல்ஹாம் மௌலானா, மாநகர ஆணையாளர் ஜே.எம். லியாக்கத் அலி மற்றும் பள்ளிவாசல் தலைவர் ஏ.எல். ஏ சகாப், பள்ளிவாசல் நிருவாகிகள், முக்கிய ஊர்ப் பிரமுகர்கள், பொதுமக்கள் எனப் பலரும் கலந்து கொண்டனர்.

LEAVE A REPLY