ஸாலிஹ் அல்குர்ஆன் மத்ரஸா வின் 24வது மாபெரும் விழா-2016

0
223

(ஜுனைட்.எம்.பஹ்த்)

காத்தான்குடி ஸாலிஹ் அல்குர்ஆன் மத்ரஸாவில் அல்குர்ஆன் கற்று வெளியாகும் மாணவர்களின் 24 வது வருட மாபெரும் விழா இன்ஷா அல்லாஹ் 25.03.2016 வெள்ளிக்கிழமை பி.ப 3.00 மணிக்கு காத்தான்குடி ஹிஸ்புல்லாஹ் மண்டபத்தில் ஸாலிஹ் அல்குர்ஆன் மத்ரஸாவின் அதிபர் M.S.M.அஸார் மெளலவி தலைமையில் இடம்பெறவுள்ளது.

இவ் விழாவில் 2015 ம் வருடம் அல்குர்ஆன் பரீட்சையில் சித்தியடைந்த 59 மாணவர்களை கெளரவிப்பதோடு, இம் மத்ரஸாவில் அல்குர்ஆன் கற்று வெளியேரி உயர்நிலையில் உள்ள மாணவர்களும் கெளரவிக்கப்படவுள்ளனர்.

அத்துடன் சமூகத்திற்கு பல சேவைகள் செய்த மூத்தவர்களுக்கான அதி உயர் கெளரவ விருதும் வழங்கப்படவுள்ளது.

விழாவில் மத்ரஸா மாணவர்களின் நிகழ்வுகளும், பரிசளிப்பு நிகழ்வும் இடம்பெறவுள்ளது. இந் நிகழ்வில் அனைவரும் கலந்து சிறப்பிக்குமாறு அழைக்கிறார்கள்.

LEAVE A REPLY