அம்பாறை மாவட்ட ஊடகவியலாளர் சம்மேளனத்தின் விஷேட பொதுச்சபைக் கூட்டம்

0
201

-சப்னி-

அம்பாறை மாவட்ட ஊடகவியலாளர் சம்மேளனத்தின் விஷேட பொதுச்சபைக்கூட்டம் ஞாயிற்றுக்கிழமை (27) காலை9.45 மணிக்கு மருதமுனை பொது நூலக மண்டபத்தில் இடம்பெறவுள்ளதாக சமேளனத்தின் செயலாளர் எஸ்.எல்.அஸீஸ் நேற்று (23) தெரிவித்தார்.

அவர் மேலும் கூறுகையில்,

சம்மேளனத்தின் தலைவர் கலாபூசணம் மீரா எஸ். இஸ்ஸடீன் தலைமையில் இடம்பெறவுள்ள இவ் விஷேடபொதுச்சபைக்கூட்டத்தில் சம்மேளனத்தினால் நடைமுறைப்படுத்தப்படவுள்ள எதிர்கால வேலைத்திட்டங்கள் மற்றும் அங்கத்தவர்கள் நலனோம்பல் விடயங்கள் தொடர்பான விஷேட கலந்துரையாடல் இடம்பெறவுள்ளதாக கூறினார்.

மேலும், சம்மேளன யாப்பு விதிகளில் சில திருத்தங்கள் இடம்பெறவுள்ளதால் அங்கத்தவர்கள் அனைவரும் தவறாது கலந்துகொள்ளுமாறு வேண்டிக்கொண்டுள்ளார்.

LEAVE A REPLY