‘ஏன் நாங்கள் வெற்றிபெற்றது உங்களுக்கு பிடிக்கவில்லையா?” போட்டியின் பின்னர் கோபமடைந்த டோனி

0
250

இந்தியா வெற்றிபெற்றது உங்களுக்குப் பிடிக்கலையா என்று இந்திய நாட்டு செய்தியாளரைப் பார்த்து கோபமாகக் கேட்டார் அணித் தலைவர் டோனி.

‘கேப்டன் கூல்’ என்று அழைக்கப்படும் டோனி இப்போதெல்லாம் அவ்வப்போது கோபப்படவும் செய்கிறார்.

தனது கோபத்தையம் அவர் வெளிக்காட்ட ஆரம்பித்துள்ளார்.

இந்த நிலையில் நேற்று பங்களாதேஷிடம் போராடி இந்திய அணி வெற்றி பெற்றது.

போட்டி முடிந்த பின்னர் செய்தியாளர்களை டோனி சந்தித்தபோது ‘நெட் ரன் ரேட்’ குறித்து இந்திய செய்தியாளர் ஒருவர் ஹிந்தி மொழியில் கேட்ட கேள்விக்கு கோபமாக கருத்து தெரிவித்துள்ளார்.

ஒரு நிமிடம்

‘நெட் ரன் ரேட்’; நமக்கு சாதகமாக இல்லையே என்று அந்த செய்தியாளர் கேட்டபோது, ஒரு நிமிடம்…! இந்தியா வென்றது உங்களுக்கு மகிழ்ச்சி தரவில்லை என்று நினைக்கிறேன். உங்களுடைய கேள்வி, கேள்வி கேட்கும் முறை எல்லாவற்றையும் பார்த்தால் அப்படித்தான் தோன்றுகிறது என கோபமாக கூறினார்.

தொடர்ந்து டோனி கருத்து தெரிவிக்கையில், நாம் நாணய சுழற்சில் வெற்றி பெறவில்லை. இந்த ஆடுகளத்தில் எவ்வாறு துடுப்பெடுத்தாட முடியும் என்பதை நீங்கள் ஆராய்ந்து பார்க்க வேண்டும்.

வெளில உட்கார்ந்து கொண்டு கதைக்க கூடாது.

இந்த ஆடுகளத்தில் எம்மால் ஏன் அதிகம் ஓட்ட எண்ணிக்கையை எடுக்க முடியவில்லை என்பதை ஆராய்ந்து பார்க்க வேண்டும். வெளியில் உட்கார்ந்து கொண்டு இதைப் பற்றியெல்லாமல் யோசிக்காமல் இருந்தால் நீங்கள் கேள்வியே கேட்கக் கூடாது என்றார்.

இதேவேளை குறுக்கிட்ட செய்தியாளர்,

டோனி சொல்வது போன்று இந்த வெற்றியால் இந்தியாவுக்கு சந்தோஷம்தான் என்றாலும் கூட, நெட் ரன் ரேட் நமக்குப் பாதகமாகத்தான் உள்ளது. அடுத்து நாம் அவுஸ்திரேலியாவுடன் இறுதி லீக் போட்டியில் ஆடவுள்ளோம். இப் போட்டியில் நாம் கட்டாயம் வெற்றி பெற வேண்டும்.

அப்படி வெற்றி பெறத் தவறினால் அரையிறுதி வாய்ப்பை இழந்து விடும் என்றார்.

LEAVE A REPLY