ஆஸ்திரேலியா ஆல்ரவுண்டர் வாட்சன் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவிப்பு

0
140

ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் ஆல்ரவுண்டர் ஷேன் வாட்சன் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக இன்று அறிவித்துள்ளார். தற்போது நடந்துவரும் டி20 உலகக் கோப்பையுடன் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக தெரிவித்துள்ளார்.

வாட்சன் கடந்த ஆண்டு இறுதியில் டெஸ்ட் போட்டியில் இருந்து ஓய்வு பெற்றார். ஆனால், கடந்த செப்டம்பர் மாதம் முதல் ஆஸ்திரேலியாவின் ஒருநாள் அணியில் வாட்சன் சேர்க்கப்படவில்லை. ஆஸ்திரேலியாவின் டி20 அணிக்கு மட்டுமே வாட்சன் விளையாடி வந்தார்.

முன்னாள் கேப்டன் ஸ்டீவ் வாக்கிற்கு பிறகு ஆஸ்திரேலியாவின் சிறந்த பேட்டிங் ஆல்ரவுண்டராக வாட்சன் கருதப்படுகிறார். கடந்த 2002-ம் ஆண்டு தென் ஆப்பிரிக்காவிற்கு எதிரான போட்டியில் அறிமுகமானார் வாட்சன். தொடர்ந்து 14 ஆண்டுகளாக ஆஸ்திரேலியாவிற்காக விளையாடியுள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் “கடந்த ஒருவாரமாகவே ஓய்வு குறித்து சிந்தித்து வந்தேன். சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதற்கு இதுவே சரியான தருணம். எனக்கு சிறு குழந்தைகளுடன் கூடிய குடும்பம் உள்ளது. மேலும் சர்வதேச போட்டி அட்டவணையும் நெருக்கடி மிகுந்ததாக உள்ளது. அடுத்து வரும் இரண்டு முக்கிய போட்டிகளிலும் விளையாடுவேன்” என்று தெரிவித்துள்ளார்.

பிக் பாஸ் போன்ற உள்ளூர் டி20 போட்டிகளில் தொடர்ந்து விளையாடப் போவதாக என்று வாட்சன் தெரிவித்துள்ளார்.

LEAVE A REPLY