தென் மாகாணத்தில் மின் துண்டிப்பிற்கான காரணம் வெளியாகியது

0
165

தென் மாகாணத்தின் பல பிரதேசங்களில் நேற்று இரவு மின்சார தடை ஏற்பட்டமைக்கு லக்ஸபானவில் இருந்து மின்சாரத்தை விநியோகிக்கும் மின்கட்டமைப்பு செயலிழந்தமையே காரணம் என மின்சார சபை தெரிவிக்கின்றது.

மின்சாரத்திற்கான கேள்வி அதிகரித்தமையால் மின் கட்டமைப்பு செயலிழந்துள்ளதாக மின்சார சபையின் பொது முகாமையாளர் எம்.சி.விக்ரமசேகர தெரிவித்துள்ளார.

எனினும் சிறிது நேரத்திலேயே மின் விநியோகம் வழமைக்கு கொண்டு வரப்பட்டதாக அவர் மேலும் குறிப்பிட்டார்.

இந்த மின் கட்டமைப்பை மீள செயற்படுத்த முற்பட்ட வேளையில் கண்டி மற்றும் நுவரேலிய மாவட்டங்களின் சில பிரதேசங்களில் மின்சாரத்தடை ஏற்பட்டதாக மின்சார சபை தலைவர் அநுர விஜயபால தெரிவித்தார்

LEAVE A REPLY