சிசிலியா கொத்தலாவலவிற்கு பிணை

0
49

கைதுசெய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள லலித் கொத்தலாவலவின் மனைவி சிசிலியா கொத்தலாவல இன்று பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.

செலின்கோ நிறுவனத்தின் முன்னாள் தலைவர் லலித் கொத்தலாவலவின் மனைவி சிசிலியா கொத்தலாவல லண்டனிலிருந்து டுபாய் ஊடாக இலங்கைக்கு விமானத்தில் வந்தபோது, கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து சுங்கப் பிரிவு அதிகாரிகளால் கைது செய்யப்பட்டார்.

கோல்டன் கீ நிறுவனம் நட்டத்தில் வீழ்ந்ததைத் தொடர்ந்து அதன் வைப்பாளர்கள் நிலையான வைப்பொன்றைக் கோரினர்.

இந் நிலையிலேயே 2009 ஆம் ஆண்டு சிசிலியா கொத்தலாவல நாட்டில் இருந்து தப்பிச் சென்றிருந்தார். இதனையடுத்து அவர் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்தபோது கைது செய்யப்பட்டு குற்றப்புலனாய்வு பிரிவிடம் ஒப்படைக்கப்பட்டார்.

இதனையடுத்து, அவர் மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மீளாய்வு மனுவை விசாரித்த நீதவான் ஒரு இலட்சம் ரூபா ரொக்கப் பிணை மற்றும் 10 இலட்சம் ரூபா பெறுமதியான சரீரப் பிணைகள் இரண்டில் சந்தேகநபரை விடுவித்து உத்தரவிட்டுள்ளார்.

மேலும், சந்தேகநபரின் பாஸ்போட் நீதிமன்றத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதோடு, வெளிநாடு செல்ல வேண்டுமாயின் நீதிமன்றத்தின் அனுமதியைப் பெற வேண்டும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

LEAVE A REPLY