கடைசி ஓவரில் நடந்தது என்ன? டோனி விளக்கம்

0
308

எதிரான டி20 போட்டியில் கடைசி ஓவரில் சிறப்பாக பந்துவீசிய பாண்டியாவுக்கு இந்திய அணித்தலைவர் டோனி பாராட்டு தெரிவித்துள்ளார்.
வங்கதேசம்- இந்தியா அணிகள் மோதிய உலகக்கிண்ண டி20 லீக் ஆட்டம் நேற்று பெங்களூரில் நடைபெற்றது.

இதில் இந்தியா நிர்ணயித்த 147 ஓட்டங்கள் இலக்கை வங்கதேசம் எளிதில் நெருங்கியது.

கடைசி ஓவரில் மூன்று பந்தில் வங்கதேசத்தின் வெற்றிக்கு 2 ஓட்டங்கள் தேவை என்ற நிலையில், பாண்ட்யா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

மேலும், கடைசி பந்தையும் அவர் சிறப்பாக வீச அந்த பந்திலும் விக்கெட் விழுந்தது. இதனால் இந்தியா 1 ஓட்டத்தால் ’திரில்’ வெற்றி பெற்றது.

இது குறித்து இந்திய அணித்தலைவர் டோனி கூறுகையில், ”கடைசி ஓவரில் ஒட்டுமொத்தமாக சிறப்பாக பந்துவீசப்பட்டது. நாங்கள் சில விடயங்களை நன்றாக திட்டமிட்டோம்.

பாண்ட்யா யார்க்கர் பந்துவீசுவதை நாங்கள் விரும்பவில்லை. அதேபோல் ’வைட்’ பந்துகளை வீசாமல் இருக்க வேண்டும். இதனை அவருக்கு தெளிவாக கூறினோம்.

துடுப்பாட்ட வீரர்களுக்கு வாய்ப்பு கொடுக்க கூடாது என்பதில் தெளிவாக இருந்தோம். குறிப்பாக பாண்ட்யா கடைசி பந்தை அற்புதமாக வீசினார்” என்று கூறியுள்ளார்.

LEAVE A REPLY