மாவடிப்பள்ளியில் ACMC மத்திய குழு அங்குரார்ப்பணம்

0
125

அம்பாறை மாவட்டம், மாவடிப்பள்ளி பிரதேசத்தில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் மத்திய குழு அமைக்கப்பட்டுள்ளது.

கட்சியின் அங்கத்துவ வாரத்தை முன்னிட்டு அகில இலங்கை மக்கள் காங்கிரசின் பிரதித் தலைவரும் இலங்கை அரச வர்த்தக கூட்டுத்தாபனத்தின் தலைவரும் கிழக்கு மாகாண சபையின் முன்னாள் குழுத் தலைவருமான கலாநிதி ஏ.எம்.ஜெமீல் முன்னிலையில் நேற்று முன்தினம் இந்த மத்திய குழுவை அங்குரார்ப்பணம் செய்யும் நிகழ்வு இடம்பெற்றதுடன் நிர்வாகிகளும் தெரிவு செய்யப்பட்டனர்.

இதன் பிரகாரம் அகில இலங்கை மக்கள் காங்கிரசின் மாவடிப்பள்ளி பிரதேச மத்திய குழுவின் தலைவராக எம்.எம்.ஏ.ரஸ்ஸாக் (ஜெமீல்), உப தலைவர்களாக ஏ.ஏ.ஏ.அஸாம் மௌலவி, ஏ.ஆர்.எம்.ஹில்மி, செயலாளராக கே.ஜஹான் (இம்தியாஸ்), பொருளாளராக வி.எம்.நசீர், உப செயலாளராக எம்.எம்.சியாத் ஆகியோர் தெரிவு செய்யப்பட்டனர்.,

அத்துடன் பிரச்சார செயலாளர்களாக ஏ.எல்.எம்.சதான், இளைஞர் அமைப்பாளராக என்.எம்.சாஜித் அஹமட், கல்வி பிரிவு பொறுப்பாளராக எம்.எம்.எம்.சபான், கலாச்சார பொறுப்பாளராக எம்.எச்.எம்.அன்சார், விளையாட்டுத்துறை பொறுப்பாளராக ஏ.எம்.நாஸில், கணக்காய்வாளராக எம்.எச்.உவைஸ் (ஆஸிர்) ஆகியோர் தெரிவு செய்யப்பட்டனர்.

இவர்களுடன் மற்றும் சிலர் மத்திய குழுவின் நிர்வாக சபை உறுப்பினர்களாகவும் தெரிவாகியுள்ளனர்.

இந்நிகழ்வில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் முக்கியஸ்தகர்களான எம்.ஐ.உதுமாலெப்பை, மான்குட்டி ஜுனைடீன், ஏ.எல்.ஜஹான், எஸ்.ஏ.வஹாப், எம்.பஸ்மீர் ஆகியோர் கலந்து கொண்டனர்.

LEAVE A REPLY