3 பாடசாலைகளின் பிரதான கதவுகளை மூடி மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் பகிஷ்கரிப்பில்…

0
165

குச்சவெளி அந்நூரிய்யா முஸ்லிம் மகா வித்தியாலயம் முன்பாக 2016.03.23ஆந்திகதி பாடசாலை மாணவர்கள், பெற்றோர்கள் மற்றும் பாடசாலை அபிவிருத்தி சங்க உறுப்பினர்கள் ஆகியோர் இணைந்து அந்நூரிய்யா முஸ்லிம் மகா வித்தியாலயம், குச்சவெளி இலந்தை குளம் வித்தியாலயம் மற்றும் குச்சவெளி அநூரிய்யா ஜூனியர் வித்தியாலயம் ஆகிய பாடசாலைகளுக்கு ஆசிரியர்கள் நியமிக்கப்படாமை குறித்து தொடர்ந்தும் கவனயீர்ப்பு போராட்டத்தை நடாத்தினர்.

அதனைத் தொடர்ந்து குறித்த பகுதிக்கு கிழக்கு மாகாண சபை உறுப்பினர் ஆர்.எம். அன்வர் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர் எம்.எஸ். தௌபீக் மற்றும் முன்னாள் பிரதேச சபை உறுப்பினர் ஆசிக் முகமது உட்பட பலர் கலந்து கொண்டதுடன் திருகோணமலை வலய கல்விப்பணிப்பாளர் விஜேந்திரன் மற்றும் குச்சவெளி கோட்டக் கல்வி அதிகாரி செல்வநாயகம் ஆகியோர் அரசியல் பிரமுகர்களின் அழைப்பின் பேரில் குச்சவெளி அந்நூரிய்யா பாடசாலைக்கு முன்பாக கலந்துரையாடலில் ஈடுபட்டு தீர்மானம் எட்டப்படாத நிலையில் பாராளுமன்ற உறுப்பினர் எம்.எஸ். தௌபீக் அவர்களினால் ஆளுநர் செயலகத்தில் விசேட கூட்டமொன்று ஏற்பாடு செய்யப்பட்டு மாகாண சபை உறுப்பினர் ஆர்.எம். அன்வர், கிழக்கு மாகாண கல்வி அமைச்சின் செயலாளர், கிழக்கு மாகாண கல்விப் பணிப்பாளர், திருகோணமலை வலய கல்விப் பணிப்பாளர், முன்னாள் பிரதேச சபை உறுப்பினர் ஆசிக் முகமது மற்றும் குச்சவெளிக்கு பொறுப்பான உதவி பொலிஸ் அத்தியட்சகர் திரு. எதிர்மான உட்பட பலர் கலந்து கொண்டு ஆளுநருக்கு நிலைமைகளை சுட்டிக் காட்டினர்.

பின்னர் ஆளுனரால் திருகோணமலை கல்வி வலயத்திற்குற்பட்ட பாடசாலைகளில் காணப்படும் சுமார் 47 மேலதிக பட்டதாரி ஆசிரியர்களை குறித்த பற்றாக்குறை நிலவும் பாடசாலைகளுக்கு எதிர்வரும் இரண்டு நாட்களுக்குள் நியமிக்கும்படி வலய கல்விப்பணிப்பாளருக்கு கடுமையான உத்தரவு ஆளுனரால் பிறப்பிக்கபட்டது.

அத்துடன் நியமிக்கும் ஆசிரியர்கள் உடன் குறித்த பாடசாலைகளுக்கு செல்லாவிட்டால் அவர்களை கட்டாய விடுமுறையில் அனுப்புமாறும் உத்தரவு பிறப்பித்தார்.

எனவே இன்னும் எதிர்வரும் இரண்டு நாட்களுக்குள் தான் ஆசிரியர்களை நியமிப்பதாக வலய கல்விப்பணிப்பாளர் ஆளுநர் முன்னிலையில் வாக்குறுதியளித்தார்.

2016.03.21ஆந்திகதி நடைபெற்ற கவனயீர்ப்பு போராட்டத்தனை தொடர்ந்து மாகாண சபை உறுப்பினர் ஆர்.எம். அன்வர் அவர்களின் முயற்சியினால் சம்மந்தப்பட்ட பாடசாலைகளுக்கு ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டுள்ளதாக திருகோணமலை வலயக்கல்விப் பணிப்பாளரினால் தெரிவிக்கப்பட்டதோடு, ஆசிரியர்களின் நியமனக்கடிதங்களின் பிரதியினையும் மாகாண சபை உறுப்பினரிடம் கையளித்தார்.

இருந்தபோதும் நியமிக்கப்பட்ட ஆசரியர்களில் இரண்டு பேர் மாத்திரம் தங்களின் கடமைகளை பொறுப்பேற்றதோடு, மற்றையவர்கள் பொறுப்பேற்காதும் குறிப்பிட்ட பாடங்களுக்கு முறையாக பாட அடிப்படையில் ஆசிரியர்கள் நியமிக்கப்படாமையும் குறிப்பிடத்தக்கதாகும்.

(ஹைதர் அலி)

LEAVE A REPLY