இலங்கைக்கான புதியதோர் சுதேசகல்விக் கொள்கை வகுக்கப்படுவது காலத்தின் கட்டாயமாகும்

0
311

இலங்கையில் சுமார் 99% வீதமானவர்கள் கல்வி வாய்ப்பை பெறுகின்றார்கள், இலவசக் கல்வி அதற்கான பிரதான காரணமாகும். சுமார் 10,000 பாடசாலைகளில் ஏறத்தாழ நாற்பது இலட்சம் மாணவ மாணவிகள் கல்வி கற்கின்றனர்.

வருடா வருடம் சுமார் 400,000 மாணவ மணவியினர் கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சைக்கு தோற்றுகின்றனர்.

இவர்களில் சுமார் 225,000 பரீட்சார்த்திகள் சித்தியடைகின்றார்கள், அவர்கள் பல்வேறு துறைகளிலும் உயர்தரம் கற்கின்றார்கள்.

சித்தியடையத் தவறும் சுமார் 175,000 மாணவர்களில் மிகசிறு விகிதத்தினரே தொழிற் கல்விகளை பெறுகின்றனர், பெரும்பாலானோர் நிபுணத்துவம் தொழில் பயிற்சியின்றி தொழில் சந்தைகளிற்கு செல்கின்றனர்.

வருடாவருடம் உயர்தரப் பரீட்சையில் பழைய புதிய பரீட்சார்த்திகள் சுமார் 250,000 பேர்கள் உயர்தரப் பரீட்சைக்கு தோற்றுகின்றனர். அவர்களில் சுமார் 150,000 பேர்கள் சித்தியடைகின்றார்கள்.

சித்தியடையத் தவறும் சுமார்100,000 மாணவர்களில் மிகசிறு விகிதத்தினரே தொழிற் கல்விகளை பெறுகின்றனர், பெரும்பாலானோர் நிபுணத்துவம் தொழில் பயிற்சியின்றி தொழில் சந்தைகளிற்கு செல்கின்றனர்.

உயர்தரப் பரீட்சையில் சித்தியடைந்தாலும் அவர்களில் சுமார் 25000 மாணவர்களுக்கே பலகலைக் கழகங்களில் இடம் இருக்கின்றது.

மிகுதி 95% மாணவர்களுக்கு உயர்கல்வி வாய்ப்புக்கள் இல்லாமல் போய் விடுகின்றது.

இவாறான நிலையில் அவர்களிலும் மிகசிறு விகிதத்தினரே தொழில்தொழின் நுட்பக் கல்விகளை பெறுகின்றனர், பெரும்பாலானோர் நிபுணத்துவம் தொழில் பயிற்சியின்றி தொழில் சந்தைகளிற்கு செல்கின்றனர்.

வருடா வருடம் சுமார் 300,000 இலங்கையர் தொழிற் பயிற்சிகள், விஷேட நிபுணத்துவங்களின்றி மத்தியகிழக்கு நாடுகளின் தொழில் சந்தைகளிற்கு செல்கின்றனர்.

உயர் தர சாதாரண தர மாணவர்களுக்கான தொழில் தொழின் நுட்ப பயிற்சி கற்கைகளுக்கான வாய்ப்புக்கள் இருந்தாலும் சுமார் 6% களுக்கே அங்கும் வாய்ப்புக்கள் இருக்கின்றன.

இலங்கையில் மொத்த தேசிய உற்பத்தியில் சுமார் 2% கல்விக்காக செலவிடப்படுகின்றது, குறைந்த பட்சம் 10% அல்லது 15% மாவது கல்விக்காகவும் மனித வள மூலதன விருத்திக்காக இலங்கை ஒதுக்கீடு செய்தல் வேண்டும்.

இலங்கையில் கல்வித்திட்டம் அதிக சுமை கூடியதாக இருப்பதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன, பல்கலை கழகங்களில் இடம் போதாமை காரணமாக உயர்தரப் பரீட்சை கடினமாக்கப் பட்டுள்ளது.

இலவசக் கல்வி காவு கொள்ளப்படும் என்ற அச்சம் இருப்பதனால் இலங்கையில் தனியார் உயர்கல்வி நிறுவனங்கள் மற்றும் பலகலைக் கழகங்கள் உருவாக்கப்படுவதற்கு எதிர்ப்புத் தெரிவிக்கப் படுகின்றது.

சுமார் 10% மாணவ சமுதாயத்திற்கே இலங்கையில் உயர்கல்வி வாய்ப்புக்கள் இருப்பதனால் வெளிநாடுகளிற்கு சென்று கற்க முடியாத பெரும்பான்மையான மாணவர்களிற்கு பெரும்அநீதிஇழைக்கப்படுகின்றது.

இலங்கையில் உயர்தரம் கற்றவர்களைவிட தகைமை குறைந்தவர்கள் வர்த்தக முகாமைத்துவ முதுமாணி பட்டச் சான்றிதல்களோடு பிறநாடுகளில் இருந்து மத்திய கிழக்கு தொழில் சந்தைக்கு வரகைதந்து உயர்பதவிகளில் இருக்கின்றனர்.

உண்மையில் இலங்கைக்கான புதியதோர் சுதேசகல்விக் கொள்கை வகுக்கப்படுவது காலத்தின் கட்டாயமாகும், அதேவேளை தேசிய மற்றும் உலக தொழில் சந்தைக்கு அப்பால் விவசாயம், மீன்பிடி, கால்நடை,வளர்ப்பு, கைத் தொழில்கள், சிறிய நடுத்தர தொழில் முயற்சிகள் என்பன வற்றில் இளம் தலை முறையினருக்கு போதிய ஊக்குவிப்புக்கள் வழங்கப்படல் வேண்டும்.

LEAVE A REPLY