அதிக வெப்பத்தால் மக்கள் அவதி, குளிர்ந்த நீரை பருகுதல் கூடாது: Dr நஸ்ருதீன்

0
285

(ஜுனைட்.எம்.பஹ்த்)

இலங்கையில் தற்போது நிலவிவரும் வெப்ப காலநிலை மேலும் சில நாட்களுக்கு நீடிக்கும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இலங்கையின் நேர் மேல் திசையில் சூரியன் பயணிப்பதால் வெப்பமான காலநிலை எதிர்வரும் ஏப்ரல் மாதம் வரை தொடரும் எனவும் நாட்டில் வெப்பநிலை பகல்வேளையில் 3 பாகை செல்ஸியஸ் ஆகவும் இரவில் 2 பாகை செல்ஸியஸ் ஆகவும் அதிகரித்துள்ளதாகவும் வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

அதிக வெப்பத்தின் உஷ்னத்தால் குழந்தைகளுக்கு தோல் உலர்வு, தோலில் கொப்புளங்கள் தோன்­றுதல், சொரிச்சல், சளியுடன் கூடிய இருமல், இதனைத் தொடர்ந்து வரும் காய்ச்சல் போன்றன ஏற்படலாம் இது தொடர்பில் தாய்மார்கள் அவதானமாக இருக்குமாறும், அதிகமாக வெயிலில் வேலை செய்பவர்கள் தங்களது வேலை நேரத்தை அதிக வெயில் இல்லாத நேரத்தில் மேற்கொள்வது நல்லது அத்துடன் வெயில் நேரத்தில் விளையாடுவதை மாணவர்களும் , சிறுவர்களும் தவிர்ந்து கொள்ள வேண்டும்.

அதிக வெப்பத்தை தனிப்பதற்கு குளிர்ந்த நீரை பருகுதல் முற்றாக தவிர்க்கப்படல் வேண்டும். இதனால் பாரிய விளைவுகள் ஏற்பட வாய்ப்புகள் உண்டு என காத்தான்குடி சுகாதார வைத்திய அதிகாரி வைத்தியர் U.L.M.நஸ்ருத்தீன் தெரிவித்தார்.

மட்டக்களப்பு மாவட்டத்தில்
ஏற்பட்டுள்ள உஷ்ணத்தை தனிப்பதற்காக மக்கள் இளநீர், வெள்ளரிப்பழம், வத்தப்பழம், நொங்கு ஆகிய நீர் ஆகாரங்களை அதிகமாக கொள்வனவு செய்து வருகின்றனர்.

LEAVE A REPLY