சர்வதேச 20 ஓவர் கிரிக்கெட் போட்டியில் ஆயிரம் ரன்னை கடந்த டோனி

0
95

சர்வதேச 20 ஓவர் கிரிக்கெட் போட்டிகளில் இந்திய அணியின் கேப்டன் டோனி ஆயிரம் ரன்னை கடந்தார்.

டி20 உலகக் கிண்ண கிரிக்கெட் தொடரில் பெங்களூரில் நேற்று நடந்த ஆட்டத்தில் இந்திய அணி, வங்காளதேசம் அணியை ஒரு ரன் வித்தியாசத்தில் வென்றது.

இந்த ஆட்டத்தில் இந்திய அணியின் கேப்டன் டோனி 13 ரன்கள் எடுத்தார். அவர் 5 ரன்னை எடுத்தபோது சர்வதேச டி20 போட்டிகளில் 1000 ரன்னை தொட்டார். மொத்தம் 60 ஆட்டங்களில் 1008 ரன்கள் எடுத்துள்ளார்.

இதன்மூலம் ஆயிரம் ரன்னை கடந்த 5–வது இந்திய வீரர் டோனி ஆவார். இதற்கு முன்பு வீராட் கோலி, ரோகித் சர்மா, ரெய்னா, யுவராஜ் ஆகியோர் ஆயிரம் ரன்கள் இலக்கை எட்டியிருந்தனர்.

LEAVE A REPLY