அக்கரைப்பற்றில் உள்ள நீர்வழங்கள் பிராந்தியக் காரியாலத்தில் எந்த மாற்றமும் நடக்காது: ஹக்கீம் உறுதி

0
222

(சப்னி)

அக்கரைப்பற்றில் உள்ள நீர்வழங்கள் பிராந்தியக் காரியாலத்தில் எந்த மாற்றமும் நடக்காது என அமைச்சர் ரஊப் ஹக்கீம் உறுதியளித்தாக கட்சியின் உயர்பீட உறுப்பினர் நஸார் ஹாஜி தெரிவித்தார்.

கடந்த 19ம் திகதி பாலமுனையில் ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் தேசிய மாநாடு நடைபெற்றதைத் தொடர்ந்து சமகாலட்தில் கட்சி எதிர்நோக்கியுள்ள சவால்களுக்கு முகம்கொடுத்துது எதிர்கால கட்டதில் கட்சியை வெற்றிகரமாக முன்கொண்டு செல்வதற்கான திட்டங்கள்பற்றி கலந்துரையாடுவதற்கான கூட்டம் ஒன்று சென்ற செவ்வாய் (22) மாலை 7.30 மணியளவில் தலைவரின் இல்லத்தில் இடம்பெற்றதாக ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசின் உயர்பீட உறுப்பினர் நஸார் ஹாஜி தெரிவித்தார்.

அங்கு சென்ற அவர் கருத்து தெரிவிக்கையில்,

கட்சி முக்கியஸ்தவர்களுடனான இக்கூட்டத்துக்கு நானும் அழைக்கப்பட டிருந்தேன் இதன்போது நீர் வழங்கள் வடிகாலமைப்பு சபையின் அக்கரைப்பற்று பிராந்திய முகாமையாளர் காரியாலயம் துண்டாடப்படுவதற்கு எதிராக என்னால் வெளியிடப்பட்ட அறிக்கையை தான்வாசித்ததாகவும், எமது பிராந்தியக்காரியாலயம் துண்டாடப்படுவதிலுள்ள விபரீதங்களை நன்கு புரிந்து கொண்டதாகவும் அவ்வாறு பிரிக்கப்படுவதன் மூலம் எதிர்காலத்தில் அக்கரைப்பற்று பிராந்திய முகாமையாளர் காரியாலயம் இல்லாமல் போவதற்கான சாத்தியங்கள் ஏற்படும் என்பதை தான் ஏற்றுக்கொள்வதாகவும் தெரிவித்ததுடன் தான் நீர்வழங்கல் வடிகாலமைப்பு அமைச்சராக இருக்கும் காலத்தில் அக்கரைப்பற்று பிராந்திய முகாமையாளர் காரியாலயம் பிரிக்கப்பட மாட்டாது எனவும் கட்சிப் பிரமுகர்கள் முன்னிலையில் தலைமையால் என்னிடம் வாக்குறுதி அளிக்கப்பட்டது என தெரிவித்தார்.

மேலும், அக்கரைப்பற்று பிராந்திய முகாமையாளர் காரியாலயம் துண்டாடப்படுவது தொடர்பான விவகாரத்துக்கு இதன் மூலம் முற்றுப்புள்ளி இடப்பட்டதாக உத்தியோகபூர்வமாக அறிவிக்கும்படியும் தலைமையால் தான் வேண்டப்பட்டற் கிங்கிணங்க இச்செய்தியை மக்களுக்கு அறியத்தருவதில் மகிழ்ச்சியடைகின்றேன்.

எமது நியாயமான கோரிக்கையை நிறைவேற்றித்தந்தமைக்காக இறைவனுக்கும் தலைமைக்கும் எமது நன்றிகள் உரித்தாகட்டும். அல்ஹம்துலில்லாஹ்! கட்சிக்காக சமூகத்தை விற்காமல் சமூகத்திற்காக கட்சியைப் பயன்படுத்தும் அரசியலுக்குக் கிடைத்த இந்த வெற்றியை முன்மாதிரியாகக் கொண்டு எதிர்காலத்தில் எமது அரசியல் ஒழுங்கமைகப்பட வேண்டும் என அனைவரையும் அன்பாக வேண்டிக் கொள்கின்றேன். என நஸார் ஹாஜி மேலும் தெரிவித்தார்.

LEAVE A REPLY