பழைய நோக்கியா போன்தான் வைத்துள்ளேன், சமூக வலைதளங்களில் இல்லை, செய்திதாள் படிப்பது இல்லை: ஆஷிஸ் நெஹ்ரா

0
261

கிரிக்கெட் வாழ்க்கையே முடிந்துவிட்டது என்று நினைத்த போது 36 வயதில் மீண்டும் அதிரடியாக இந்திய அணிகுள் நுழைந்து அசத்தி வருகிறார் நெக்ரா.

மற்ற கிரிக்கெட் வீரர்களை ஓப்பிடும் போது நெக்ரா கொஞ்சம் வித்தியாசமானவர். ஊடகளுக்களுக்கு பேட்டியளிப்பதை கூட தவிர்க்க கூடியவர். அப்படிப்பட்ட நெக்ராவிடம் சமூகவலைதளங்களில் இந்திய-வங்காளாதேச ரசிகர்கள் மத்தியில் நடந்துவரும் சண்டை குறித்து ஒரு செய்தியாளர் கேள்வி எழுப்பினார். ஆனால் நெக்ராவின் பதிலைக் கேட்டு மொத்த செய்தியாளர்களும் வாய் விட்டு சிரித்தனர்.

இதோ நெக்ராவின் பதில் “ நீங்கள் தவறான ஆளிடம் இந்த கேள்வியை கேட்கிறீர்கள். நான் எந்த சமூகவலைதளங்களிலும் இல்லை. இன்னமும் பழைய நோக்கிய போனை தான் பயன்படுத்துகிறேன். நான் பேஸ்புக், டுவிட்டர் மற்றும் இன்ஸ்டகிராமில் இல்லை. நான் செய்திதாள்களையும் படிப்பது இல்லை.” என்று தெரிவித்தார்.

LEAVE A REPLY